India

பீகாரில் படகு கவிழ்ந்து விபத்து – 7 பேர் பரிதாப பலி

Rate this post

பீகாரில் படகு கவிழ்ந்து ஏற்பட்ட விபத்தில் 7 பேர் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கங்கை மற்றும் அதன் கிளை நதிகளில் ஒன்றான கங்கை சங்கமிக்கும் இடத்தில், படகில் விவசாயிகள் 10 பேரை ஏற்றிக் கொண்டு சென்றபோது, திடீரென படகு கவிழ்ந்து விபத்து ஏற்பட்டது.

இதில், 3 பேர் நீந்திச் சென்று உயிர் தப்பிய நிலையில் மற்றவர்களை தேடும் பணியில் மீட்பு படையினர் ஈடுபட்டனர்.

இரவு முழுவதும் தொடரந்து நடத்திய தேடுதலில் குழந்தைகள் உள்பட 7 பேர் சடலமாக மீட்கப்பட்டுள்ளனர்.

இதனிடையே, இச்சம்பவம் குறித்து இரங்கல் தெரிவித்துள்ள முதல்வர் நிதிஷ்குமார், இறந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.4 லட்சம் நிவாரணத் தொகை வழங்க மாவட்ட நிர்வாகத்துக்கு உத்தரவிட்டிருக்கிறார்.

Comment here