India

புதிய சாம்பியன்களை வெளிக்கொண்டு வரும் வாய்ப்பு உள்ளது : ரவி சாஸ்திரி

Rate this post

8-வது 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி ஆஸ்திரேலியாவில் வரும் 16-ந் தேதி முதல் நவம்பர் 13-ந்தேதி வரை நடக்க இருக்கிறது.

இதையடுத்து உலக கோப்பை போட்டிக்கான இந்திய அணி நேற்று அதிகாலை மும்பையிலிருந்து விமானம் மூலம் ஆஸ்திரேலியாவின் பெர்த் நகருக்கு சென்றனர்.

இந்நிலையில் இந்திய அணியின் முன்னாள் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி கூறுகையில், பும்ராவுக்கு காயம் ஏற்பட்டுள்ளது துரதிர்ஷ்டவசமானது. இப்போது அதிகளவில் கிரிக்கெட் போட்டிகள் விளையாடப்பட்டு வருகிறது.

அதன் காரணமாக காயம் ஏற்படுகிறது. பும்ரா காயமடைந்துள்ளார்.இது மற்றவர்களுக்கு அணியில் கிடைத்துள்ள ஒரு வாய்ப்பு.நம்மிடம் தரமான மற்றும் பலமான அணி உள்ளது என்றார்.

Comment here