India

புதுச்சேரியில் தமிழ் மொழியில் மருத்துவக் கல்வி – ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் தகவல்

Rate this post

புதுச்சேரியில் நடைபெற்ற மூத்த குடிமக்களை கவுரவிக்கும் விழாவில் பங்கேற்ற துணை நிலை கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் கலந்து கொண்டார்.

பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் பேசியதாவது;-

மத்திய பிரதேசத்தில் இந்தி மொழியில் மருத்துவக் கல்வியை கொண்டு வந்தது போல், தமிழிலும் மருத்துவக் கல்வியை கொண்டு வர அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்படும்.

சுமார் 6 மாதத்திற்குள் மருத்துவக் கல்லூரி புத்தகங்களை தமிழில் தயாரிப்பதற்கு அத்தனை முயற்சிகளும் எடுக்கப்படும்.

தாய் மொழியான நம் தமிழ் மொழி மருத்துவக் கல்வியை கொண்டு வருவதற்கான அத்தனை முயற்சிகளையும், ஒரு மருத்துவர் என்ற முறையில் செய்வேன்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Comment here