புதுச்சேரி

புதுச்சேரி நகராட்சி செயல்படுகிறதா -கிராம மக்கள்

Rate this post

உழவர்கரை நகராட்சி செயல்படுகிறதா
பெரிய காலாப்பட்டு கிராம மக்கள் கேள்வி
உழவர்கரை நகராட்சி செயல்படுகிறதா என்று பெரிய காலாப்பட்டு கிராம மக்கள் கேள்வி எழுப்பியுள்ளார்கள்
பெரிய காலாப்பட்டில் உள்ள வாட்டர் டேங்க் சரிவர இயக்கப்படுவதில்லை
எத்தனையோ முறை அதிகாரிகளிடம் கூறியும்
நடவடிக்கை இல்லை
வாட்டர் டேங்க் ஊழியர்கள்
சரியான நேரத்திற்கு
தண்ணீர் திறந்து விடுகிறார்களா என்பதைக்கூட
கவனிக்க நேரமில்லாமல் உழைத்து உழைத்து கலைத்து விட்டார்கள்
கடும் வெயில் சுட்டெரிக்கும் இந்த வேலையில்
வாட்டர் டேங்க் குடிநீரையே நம்பியிருக்கும்
ஏழைகளின் நிலைமை மிகவும் பரிதாபமாக உள்ளது
காலையில் 10 நிமிடம்
மாலையில் 10 நிமிடம்
அதுவும் நேரம் காலம் கிடையாது
அவர்கள் எப்பொழுது திறக்கிறார்கள் அப்பொழுது தான் பிடித்துக் கொள்ள வேண்டும்
அதுவும் பத்து நிமிடம் மட்டுமே தண்ணீர் வரும்
இப்படி பொறுப்பற்ற முறையில் உழவர்கரை நகராட்சி நிர்வாகம் செயல்படுவதை நினைத்தால் மிகவும் வேதனையாக உள்ளது
எத்தனையோ முறை ஊழியர்களிடம் கூறினோம் ஒழுங்காக தண்ணீர் திறப்பதில்லை அதிகாரிகளிடம் முறையிட்டோம் அவர்களும் குறித்த நேரத்தில் தண்ணீர் விடுகிறார்களா என்பதை பரிசோதனை செய்யவில்லை
மக்களின் உயிர் தேவையான குடிநீரை
இனிமேலாவது முறையோடு வழங்குவார்களா என்று எதிர்பார்ப்போம்
இல்லையென்றால் அதற்கு வேறு வழியில் பதில் கொடுப்போம்
இவற்றுக்கெல்லாம் உழவர்கரை நகராட்சி நிர்வாகமே பொறுப்பேற்க வேண்டும்
இப்படிக்கு தாகத்துடன் பெரிய காலாப்பட்டு கிராமமக்கள் புதுச்சேரி

Comment here