வாழ்க்கை நலன்

புற்றுநோய் செல்களை வேறோடு அழிக்கும் மாதுளையின் எண்ணற்றப் பலன்கள்…!

Rate this post

மாதுளம் பழத்தை தினமும் சாப்பிட்டு வந்தால் உடலுக்கு பல நன்மைகளை பெறலாம், மாதுளைபழத்தில் நிறைய ஆன்டி ஆக்ஸிடன்கள் இருக்கிறது,

மாதுளம் பழத்தில் அதிக ஊட்டச்சத்துக்கள், ஆன்டி ஆக்ஸிடன்கள் இருப்பதால், பழங்களில் இதை சூப்பர் ஃபுட் என்று அழைக்கப்படுகிறது.

மாதுளை பழத்தை அழகு மற்றும் ஒப்பனை தயாரிப்புகளில் சேர்த்துக்கொள்ளப்படுகிறது.

தினமும் ஒரு கப் மாதுளைப்பழத்தை சாப்பிட்டு வந்தால் எவ்வளவு நன்மைகள் கிடைக்கும் என்று பார்ப்போம் –

நீரிழிவு நோயாளிகளுக்கு

தினமும் மாதுளைப்பழத்தை சாப்பிட்டு வந்தால், இப்பழத்தில் உள்ள நார்ச்சத்துக்கள் நீரிழிவு நோயை கட்டுப்படுத்த உதவி செய்கிறது. உடலில் உள்ள இன்சுலின் எதிர்ப்பை குறைக்கிறது.

​இதய ஆரோக்கியத்திற்கு

தினமும் மாதுளைப்பழத்தை சாப்பிட்டு வந்தால், இப்பழத்தில் உள்ள விதைகள் நிறைய ஆன்டி ஆக்ஸிடன்கள் மற்றும் பாலிபினால்கள் காணப்படுகிறது. இது கெட்ட கொலஸ்ட்ரால் மற்றும் கெட்ட கொழுப்புகளை குறைக்க உதவி செய்கிறது. இதனால் இதயம் பாதுகாக்கப்படுகிறது. இரத்த ஓட்டத்தை பராமரிக்க உதவி செய்கிறது.

மாதுளைப்பழத்தில் உள்ள ட்ரைகிளிசரைடுகள் உடலில் உள்ள கெட்ட கொலஸ்ட்ராலை குறைக்க உதவி செய்கிறது. இது இதயத்தில் உள்ள அடைப்பை நீக்க உதவி செய்கிறது.

மலச்சிக்கலை போக்க

தினமும் மாதுளைப்பழத்தை சாப்பிட்டு வந்தால், செரிமானத்திற்கு உதவுகிறது. மலச்சிக்கலை போக்குகிறது. குடல் ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவி செய்கிறது.

புற்று நோய்க்கு

தினமும் மாதுளைப்பழத்தை சாப்பிட்டு வந்தால், புற்றுநோய்களை எதிர்த்து போராடும். மாதுளையில் உள்ள சாறு செரிமான மண்டல பிரச்சினைகள், மார்பக புற்றுநோய் மற்றும் பெருங்குடல் புற்றுநோய் செல்களில் ஏற்படும் அழற்சியின் செயல்பாட்டைக் குறைக்க உதவி செய்யும். மாதுளை சாறுகள் புற்றுநோய் உயிரணுக்களின் இனப்பெருக்கத்தை மெதுவாக்கும் மற்றும் புற்றுநோய் உயிரணுக்களில் செல் இறப்பைக் கூட ஏற்படுத்தும்.

Comment here