World

புளோரிடாவை புரட்டிப் போட்ட இயான் புயல் – அதிபர் ஜோ பைடன் வேதனை

4/5 - (1 vote)

அமெரிக்கா,புளோரிடா மாகாணத்தில் இயான் புயல் நேற்று முன்தினம் தாக்கியது.

இந்த புயல் தாக்குதலில் பல நகரங்கள் வெள்ள நீரில் மூழ்கிய உள்ளன. எங்கு பார்த்தாலும் ஒரே வெள்ளக் காடாக காட்சி அளிக்கிறது. இந்த இயான் புயல் மணிக்கு 150 மைல் வேகத்தில் சூறாவளிக் காற்று வீசியது.

புயல் மீட்புப் பணிகளில் 7 ஆயிரம் ராணுவ வீரர்கள் களமிறங்கி உள்ளனர்.

இந்தப் புயலின் விளைவாக புளோரிடா மாகாணத்தில் 22 லட்சத்துக்கும் அதிகமான வீடுகள் இருளில் மூழ்கியுள்ளன.

இயான் புயலால் ஏற்பட்டுள்ள சேதத்தின் அளவு நிச்சயம் பேரழிவாக இருக்கும் என தேசிய புயல் மையத்தின் உயர் அதிகாரியான அந்தோணி ரெய்ன்ஸ் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், இயன் சூறாவளியால் புளோரிடா மாகாணம் முழுவதும் கடும் துன்பத்தில் ஆழ்ந்துள்ளது என அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர், சூறாவளியால் கணிசமான உயிர் இழப்பு ஏற்பட்டிருக்கலாம் என அஞ்சுவதாக தெரிவித்துள்ளார். மேலும், புளோரிடாவின் வரலாற்றில் மிகக் கொடிய சூறாவளியாக இந்த புயல் உருவாகலாம் என்றும் கூறினார்.

Comment here