World

புளோரிடா மாகாணத்தை புரட்டிப்போட்ட இவான் புயல் – படகு கவிழ்ந்து 23 பேர் மாயம் – 20 லட்சம் பேர் பாதிப்பு

2.5/5 - (2 votes)

கரீபியன் கடலில் உருவான இவான் சூறாவளி புயல் கியூபா நாட்டை மேற்கு பகுதிகளை பயங்கரமாக தாக்கியது.

இந்த சூறாவளி புயல் மணிக்கு 195 கி.மீ. வேகத்தில் கரையை கடந்தது. அந்த நேரத்தில் பலத்த கனமழையும், சூறாவளி காற்றும் வீசியது. இந்த புயல் தாக்குதலால் அப்பகுதி முழுவதும் கடுமையாக சேதமடைந்தது.

இந்த சூறாவளி புயலால் நாடு முழுவதும் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது. கியூபாவை தாக்கிய இவான் புயல் அமெரிக்காவின் புளோரிடா கடற்கரையை நோக்கி நகர்ந்தது.

போர்ட் மியர்ஸ் நகருக்கு மேற்கே உள்ள கேயோ சோஸ்டா தீவை இப்புயல் தாக்கி கரை கடந்தது. இப்புயல் தொடக்கத்தில் 240 கி.மீ. வேகத்திலும், பின்னர் சற்று வலுவிழந்து மணிக்கு 168 கி.மீ. வேகத்திலும் பலத்த காற்று வீசியது.

இதனால் ஏராளமான வீடுகள் சேதமடைந்தன. வீட்டின் மேற்கூரைகள் காற்றில் அடித்துச் செல்லப்பட்டன. பல இடங்களில் வீடுகளை வெள்ளநீர் சூழ்ந்து கொண்டது. சாலைகளில் நிறுத்தப்பட்டிருந்த வாகனங்கள் காற்றில் கவிழ்ந்ததும், வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டது.

புளோரிடா மாகாணத்தில் 20 லட்சம் பேர் மின்சாரம் இன்றி தவித்து வருகிறார்கள்.

Comment here