Tamilnadu

பெ குடிக்க தாய் பணம் தராததால் மகன் தூக்கிட்டு தற்கொலை…!

Rate this post

கோவை சூலூர் கண்ணம்பாளையத்தை சேர்ந்தவர் விஜய் (30). இவருக்கு குடிப்பழக்கம் இருக்கிறது.

இதனால் வேலைக்கு எங்கும் செல்லாமல் வீட்டிலேயே இருந்து வந்துள்ளார்.

சம்பவத்தன்று விஜய் தன் தாயாரிடம் குடிக்க பணம் கேட்டிருக்கிறார். ஆனால் அவர் பணம் தர மறுத்துள்ளார்.

இதனால் அவர் மனவேதனையுடன் இருந்து வந்துள்ளார்.

இதனையடுத்துஅவர் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இதுகுறித்து சூலூர் போலீசாருக்கு தகவல் கொடுக்கப்ட்டது.

போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு கோவை இ.எஸ்.ஐ ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

இதையடுத்து வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Comment here