Tamilnadu

பேத்தியை 7 மாத கர்ப்பமாக்கிய தாத்தா போஸ்கோ சட்டத்தின் கீழ் கைது..!

Rate this post

பேத்தியை 7 மாத கர்ப்பம் ஆக்கிய தாத்தா போஸ்கோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார்.

திருவாரூர் மாவட்டம் குடவாசல் அருகே மாதா கோவில் தெருவை சேர்ந்த அபூர்வ சாமி (68). இவர் தன் 14 வயது பேத்தியை கடந்த 7 மாதங்களுக்கு முன்பு வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் ஆசை வார்த்தைகள் கூறி உடலுறவு ஈடுபட்டுள்ளார்.

இந்நிலையில் சிறுமி உடல்நிலை சரியில்லாததால் குடவாசல் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர் மருத்துவர்கள் பரிசோதனைகள் அந்த சிறுமி 7 மாத கர்ப்பமாக உள்ளார் என மருத்துவர்கள் தெரிவித்தனர்.

இச்சம்பவம் குறித்து நன்னிலம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் சிறுமியின் பெற்றோர் அளித்த புகாரியின் அடிப்படையில் அபூர்வசாமியை போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் கைது செய்துள்ளனர்.

Comment here