Cinema

பொன்னியின் செல்வன் படம் 4 நாட்களில் வசூல் எவ்வளவுக்கு தெரியுமா?

3.5/5 - (4 votes)

பிரபல இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் “பொன்னியின் செல்வன்”.

இப்படம் கடந்த செப்டம்பர் 30-ஆம் தேதி வெளியானது.

இப்படத்தில் ஜெயம்ரவி, விக்ரம், கார்த்தி, சரத்குமார், பார்த்திபன், ஜெயராமன், ஜஸ்வர்யா ராய், திரிஷா உள்பட பலர் நடித்துள்ளனர்‌. இப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று வருகிறது.

பொன்னியின் செல்வன் 1 படத்தின் மொத்த உலக வசூல் 4 நாட்களில் ரூ.250 கோடியை தாண்டி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

முதல் வார இறுதியில் உலகளவில் ரூ.250 கோடியை வசூலித்துள்ளது ஒரு பெரிய சாதனையாகும்.

பொன்னியின் செல்வன் முதல் நாள் தமிழ்நாட்டில் மட்டும் ரூ.25.86 கோடியை வசூலாகி உள்ளது.

2வது நாள் ரூ.21.34 கோடியையும், மூன்றாவது நாள் ரூ. 22.51 கோடி வசூலித்துள்ளது.

நான்காவது நாளான நேற்று ரூ.13.08 கோடியுடன் மொத்தம் இதுவரை நான்கு நாட்களில் ரூ.82.79 கோடியை படம் வசூலாகி உள்ளது.

Comment here