Cinema

‘பொன்னியின் செல்வன்’ ஹவுஸ்ஃபுல் – வெளியாக இருந்த படங்கள் தேதி ஒத்திவைப்பு

3.7/5 - (3 votes)

‘பொன்னியின் செல்வன்’ திரைப்படம் ரசிகர்களின் மிகுந்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் கடந்த செப்டம்பர் 30ம் தேதி வெளியானது.

இப்படம் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

இந்த படமானது அனைத்து திரையரங்குகளிலும் ஹவுஸ்ஃபுல் ஆக ஓடிக்கொண்டிருப்பதால் இந்த வாரம் வெளியாக இருந்த சில படங்கள் தள்ளி வைக்கப்பட்டுள்ளன.

இதன்படி, அக்டோபர் 7ம் தேதி வெளியாக இருந்த ‘பார்டர்’, ‘சதுரங்க வேட்டை’ மற்றும் ‘காஃபி வித் காதல்’ உள்ளிட்ட படங்களின் தேதி ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

Comment here