வரலாறு

பொன் கொழிக்கும் நாடாக இருந்தது தமிழ் நாடு

Rate this post

வரலாறு எனும் வலிமையானக்கோட்டை ,ஆதாரங்கள் எனும் கற்களால்தான்
கட்டப்படுகிறது நான் தமிழ் நாட்டில் பொன் அதிகம் புழங்கியது என்றுகூறி அதற்க்கு இலக்கிய மற்றும் சில வரலாற்று சான்றுகள் தந்திருக்கேன் .

நான் சுமார் 30 ஆண்டுகளாக தமிழ் சித்தர்கள் பற்றிய ஆர்வமும் அறிமுகமும் ,
தொடர் சிந்தனையுடனும் இருக்கிறேன் .அவர்களின் அறிவுத்திறன் குறித்து வியந்து வருகிறேன் .அவர்களின் ஆசியால் தான் அவர்களின் அறிவுச் செல்வங்களான ஓலைச் சுவடிகள் தேடும் வாய்ப்பு ம் வெற்றியும் கிட்டுவதாக உணர்கிறேன் .ஆனால் சித்தர்களின் வேதை எனும் ரசவாதக்கலை மட்டமான உலோகத்தை உயர்வாக மாற்றுவது போல் , தமது அழியும் உடலையும் உயர்வாக அழிவற்றதாக மாற்றும் முயற்சியே ஆகும் .இந்துக்லை பேராசை அற்றவருக்கே கிட்டும் .சிறிது செய்து விற்று சாப்பிட்டுக்கொள்ள சித்தர்கள் சொல்ல்லுகிறார்கள்
இந்தக்கலை நீண்ட ஆழமான செய்திகள் கொண்டது .வெளிப்படையாக கூறமுடியாதது .இதுவரை ஆதாரபூர்வமாக நிரூபணம் ஆகாதது .அத்தகைய தரவுககொண்டு நான் இந்தக்கட்டுரையை எழுதி இருந்தால் அது வரலாற்றுக் கட்டுரையாக அமைத்திருக்காது .அதை நான் ஒரு சித்தர்கள் பற்றிய குழுவில் தான் இட்டிருக்க வேண்டும் .

சித்தர்கள் தங்கம் செய்ததைப்பற்றிய இலக்கிய ஆதாரங்கள் சித்தர்பாடல்களில் மட்டும் இல்லாமல் வேறு இலக்கியங்களிலும் உள்ளது .சிவனே சித்தராக வந்து திருப்பூவணம் என்னும் ஊரிலே பித்தளை பாத்திரங்கள் அத்தனையும் பொன்னால் ஆனதாக மாற்றிய செய்தி உண்டு .ரசவாதம் தமிழ் சித்தர்கள் மட்டும் அல்ல உலகெங்கிலும் பல நாட்டிலும் அது பற்றி முயற்சியும் ஆய்வும் நடந்திருக்கிறது .
சீனாவில் ரசவாதம் செய்பவர்களுக்கு மரணதண்டனை என்ற சட்டம் ஒரு காலத்தில் இருந்திருக்கிறது .
தமிழர்களின் தங்கம் தேடிய பயணம் பல ஆயிரம் ஆண்டுகளாக இருந்துள்ளது .உலகின் பல்வேறு நாடுகளில் இருக்கும் தங்க சுரங்களுடன் தமிழர் தொடர்பு இருந்திருப்பது தங்கம் அதிகம் கிடைக்கும் நாடுகள் அனைத்துமே நாகரீகத்திலும் உயர்வில் இருந்தன .வணிகக்கத்தொடர்பு கொண்டிருந்தன .
சீனம் , கிரேக்கம் ,ரோம் பினீசியர்கள் மாயன்கள் பெரு எகிப்தியர்கள் ஆப்பிரிக்கா சோமாலியா போன்றவைமுக்கியமானவை .ஆப்பிரிக்கா என்ற பெயரே தமிழில் அபரஞ்சி என்பதில் இருந்து வந்திருக்கலாம் என்று கூட ஒரு கருத்து உண்டு .சுவர்ணபூமி என்று தாய் லாந்தை அப்போது அழைத்திருக்கிறோம் .
இப்போதுஇத்தகை செய்திகள் மெல்ல மெல்ல வெளிவரத்தொடங்கியுள்ளது .ஆய்வுகள் முழுமை பெறவேண்டும் .அத்துடன் வணிகம் அயல் நாடுகளின் தங்கத்தை இங்கே கொண்டுவந்து குவித்திருக்கின்றனர் .
பண்டைய ரோம் பேரரசுதமிழ் நாட்டின் வாசனை ப்பொருள்களுக்காக அவர்களின் பெரும்பாலான தங்கம் வெளியில் போவது குறித்து கவலைப்பட்டு சட்டமே இயற்றி உள்ளதாக வரலாற்று செய்திகள் உண்டு .
தமிழ் நாட்டின் தங்கக்குவியலுக்கு அவைகள்இங்கிருந்து கொள்ளை போனதற்கு பல வரலாற்று ஆதாரங்கள் உண்டு
.மாலிக்கபூர் பல்வேறு ஆலயங்களைக்கொள்ளை யிட்டு கொண்டு போன தங்க நகைகள் பல நூறு யானைகளிலும் வண்டிகளிலும் கொண்டு சென்றதாக செய்தி உண்டு .திருவனந்த புரம் ஆலயத்தின் நிலவறையில் கிடைத்த தங்க ஆபரணங்களின் மதிப்பை இன்னமும் மதிப்பிட இயலாத நிலை .அத்தனை அதிகம்! அதற்குப்பிறகு மற்ற அயலார் ஆட்சி அதில் நடந்த கொள்ளைகள் ! .இன்னமும் பல கோயில்களில் உள்ள தங்கத்தின் இருப்பு நாம் அறியாதது .இத்தனை தங்கம் எப்படி வந்திருக்கும் என்று ஒரு சிந்தனைத்தூண்டவே எனது முதல் கட்டுரை அமைந்திருந்தது ..

பலரும் சித்தர்களின் ரசவாதத்தால் இது நடந்திருக்கலாம் என்றார்கள் .ஆனால் ஆதாரம் இல்லாமல் இப்படி சொன்னால் உலக வரலாறு ஆய்வு இந்தச்செய்தியை ஒப்புக்கொள்ளுமா ?எனக்கும் இதில் நம்பிக்கை உண்டு நிறைய படித்திருக்கிறேன் பல ஆய்வாளர்கள் பழக்கம் உண்டு ஆனால் அறிவியல் பூர்வமான ஆதாரம் வேண்டும்
கேளப்பா..!
அணுவைத் துளைக்க அகப்படும் சக்தியும்
கருவைத் துளைத்து உருப்படும் சக்தியும்
விதைக்குள் வெடித்து வெளிப்படும் சக்தியும்
ஒளிக்குள் ஒளியவே ஒல்கிப் பெருகுதாம்
ஒளிதான் மூலம்-அது ஆதித்த ஜாலம்
ஆதித்தன் அனுவேறி அமர்ந்தொரு உலோகம்
அருந்த்தங்கம் என்பது அதன் பேராகும்!

சொர்ணஜாலத் திரட்டு
இதில் எப்படி அணுவைத்துழைப்பது விதை வெடித்து வெளிவரும் சக்திகள் என்று பேசப்பட்டிருக்கிறது பாருங்கள் ! முதலில் சித்தர் நூல்கள் செம்பதிப்பாக கிடைக்கும் ஓலைச் ஒப்புநோக்கி வெளிவரவேண்டும் .பிறகு பல்துறை ஆய்வாளர்கள் இணைந்து இவைகளை ஆராயவேண்டும் .
நாம் ஐம் போன் என்கிறோமே அதைப்பற்றிய ஒரு பாடல் பாருங்கள் !
கேளப்பா..!
பொன்னைந்தில் முதலொன்று தாமிரம்
அரிமணல் படுகை இதன் பாத்திரம்!
பொன்னைந்தில் இறந்தது வெண்கலம்
பேணும் இது கொள் பொருள் பெருநலம்!
பொன்னைந்தில் மூன்றது பித்தளைத் தாது
துலக்கிடத் துலங்குவதில் இது பொது மாது!
பொன்னைந்தில் நான்கது சந்திரவெள்ளி
மன்நீந்த மகத்தான விடமுறிக் கொல்லி!
பொன்னைந்தில் ஐந்ததே அருந்த்தங்கம்
நாற்ப்போருளும் இதனடியில் நலிந்தே இலங்கும்!

இவ்வாறு நம்மிடம் பல் குறிப்புகள் கொண்ட பல நூறு பாடல்கள் உள்ளன .ஆனால் அதை ஆராய்நது உண்மைத்தன்மை அறிந்தவர்கள் மிகக்குறைவே
.கண்டவர் விண்டிலர் ! விண்டவர் கண்டிலர் ! என்பதே உண்மை .
அது வரை ஆதாரம் இல்லாமல் முழுமையாக அறியாமல் இது குறித்து நாம் பேச இயலாது . தமிழ் நாட்டில் பித்தலாட்டம் என்ற சொல் , இது பற்றியே எழுந்திருக்கக்கூடும் .ரசவாதம் என்று ஒரு இருந்திருக்கின்றது அது தவறாக பயன்பட்டிருக்கிறதுஎன்பதற்கு இந்த சொல்லே சான்று !
இன்னமும் சொல்ல சில செய்திகளை அடுத்தும் எழுதுகிறேன்
-அண்ணாமலை  சுகுமாரன்

Comment here