கல்வி

போட்டித் தேர்வுகளுக்கு -என்ஐடி திருச்சி

Rate this post

IGNITTE குழு, சஞ்சீவ்.வி என்பவரால் நிறுவப்பட்டது  மற்றும் சரண்
பத்ரேஷ், ஆதர்ஷ் யேஷ்வந்த், அருண் பிரசன்னா, அரவிந்தன்.சி, பிரேம்
குமார், தேசிய தொழில்நுட்பக் கழகம்,திருச்சிராப்பள்ளி மாணவர்கள்
ஆகியோரால் இணைந்து நிறுவப்பட்டது.JEE போன்ற போட்டித் தேர்வுகளுக்கு
கிராமப்புறங்களில் உள்ள திறமையான அரசுப் பள்ளி மாணவர்களுக்கு தேவையான
வளங்களையும்  பயிற்சிகளையும் வழங்குவதன் அவசியத்தை அவர்கள்
உணர்ந்தனர்.அப்போதைய என்ஐடி திருச்சியின் இயக்குநரும், அப்போதைய
பெரம்பலூர் மாவட்ட ஆட்சியருமான திரு.கே.நந்தகுமார் ஐ.ஏ.எஸ். அவர்களின்
உதவிகள் மூலம் சஞ்சீவ் மற்றும் அவரது குழுவினர் பெரம்பலூரில் உள்ள அரசுப்
பள்ளியில் உயர்நிலைப் பள்ளி மாணவர்களுக்கு வகுப்புகள் நடத்தினர்.இக்குழு
வார இறுதி நாட்களில் மாணவர்களுக்கு பயிற்சியளித்தது மற்றும் குழு
நிறுவப்பட்ட அதே ஆண்டில், 2 மாணவர்கள் JEE MAIN இல் தேர்ச்சி பெற்றனர்,
13 மாணவர்கள் நீட்(NEET) இல் தேர்ச்சி பெற்றனர்.எங்கள் தற்போதைய
இயக்குநர் டாக்டர்.மினி ஷாஜி தாமஸ் அவர்களால் இந்த குழு தொடர்ந்து
ஊக்குவிக்கப்பட்டது, மேலும் 2018 ஆம் ஆண்டில், IGNITTE மூலம் பயிற்சி
பெற்ற 4 மாணவர்களில் 2 மாணவர்கள் JEE MAIN இல் தேர்ச்சி பெற்று வெற்றிக்
கதை தொடர்ந்தது. அடுத்த ஆண்டு 2 மாணவர்கள் JEE MAIN இல் தேர்ச்சி
பெற்றனர், அவர்களில் ஒருவருக்கு என்ஐடிடி இல் ஒரு இடம் ஒதுக்கப்பட்டது.

2019 ஆம் ஆண்டில், இக்குழு இந்த திட்டத்தின் பயனாளிகளை அதிகரிப்பதை
நோக்கமாகக் கொண்டது,எனவே நிறுவனத்தின் இயக்குநர் டாக்டர்.மினி ஷாஜி
தாமஸ், திருச்சி மாவட்ட ஆட்சியர், திரு.எஸ்.சிவராசு I.A.S, திருச்சியின்
முதன்மை கல்வி அலுவலர் செல்வி.சாந்தி மற்றும் குழுவின் ஆசிரிய ஆலோசகர்
டாக்டர்.எம். வெங்கட கீர்த்திகா ஆகியோரின் ஆதரவோடு IMPULSE என்னும்
செயல்முறைத் திட்டதைத் தொடங்கினர்.IMPULSE திட்டத்தின் கீழ் நுழைவுத்
தேர்வு மூலம் 600 மாணவர்களிலிருந்து 60 மாணவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு
அவர்களுக்கு என்ஐடிடியில் பயிற்சிகள் வழங்கப்பட்டது,வார இறுதி நாட்களில்
அவர்கள் தங்கியிருந்தபோது இலவச உணவு மற்றும் தங்குமிடங்களை வழங்கியது.

Comment here