India

போலி புலித்தோல், நகம் விற்ற 5 பேர் கைது…!

Rate this post

போலி புலித்தோல், நகம் விற்ற 5 பேரை போலீசார் கைது செய்தனர்.

தற்போது விலங்குகளின் தோலிலும் போலிகள் வருகின்றன. பலர் புலி நகங்களை தங்க செயினில் டாலராக பயன்படுத்தி கழுத்தில் அணிகின்றனர்.

இந்நிலையில் ஆந்திர மாநிலம் கிருஷ்ணா மாவட்டம் கர்னூல் பகுதியில் சிலர் போலி புலி நகங்களை விற்பனை செய்து வருவதாக பெனமலூர் போலீசருக்கு தகவல் கிடைத்தது.

நேற்று கன்னவரம் பகுதியில் பெனமலூர் போலீசார் ரோந்து சென்றனர்.

சந்தேகம் அடைந்த போலீசார், விரட்டி சென்று அவர்கள் 5பேரையும் மடக்கி பிடித்தனர்.

விசாரணையில் அல்லூரி சீதாராமராஜு மாவட்டம் வரராமசந்திராபுரத்தை சேர்ந்த கானுரிவம்சி வெங்கடலட்சுமிநாராயணா, விஜய் உள்பட 5பேரும் சேர்ந்து போலி புலி நகம் மற்றும் தோல்களை விற்பனை செய்ய பேரம் பேசிக்கொண்டிருந்தது தெரிய வந்தது.

அவர்களிடம் இருந்து போலி புலி தோல் மற்றும் நகங்களை போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும் இதுகுறித்து வழக்கு பதிவு செய்து 5பேரையும் கைது செய்து தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.

Comment here