Tamilnadu

மகளின் திருமணத்தில் பணிக்கு காவல் துறை சிறப்பு உதவி ஆய்வாளர்… – டி.ஜி.பி. சைலேந்திரபாபு ஆறுதல் கடிதம்

Rate this post

மகளின் நிச்சயதார்த்த நிகழ்வில் கலந்து கொள்ள விடுப்பு மறுக்கப்பட்ட காவல் துறை சிறப்பு உதவி ஆய்வாளர் சந்தனராஜ்க்கு டிஜிபி ஆறுதல் கடிதம் எழுதியுள்ளார்.

காவல் துறை சிறப்பு உதவி ஆய்வாளர் சந்தனராஜ், தனது மகளின் நிச்சயதார்த்த நிகழ்வில் கலந்து கொள்ள விடுப்பு மறுக்கப்பட்டுள்ளது. இதனால், மகளின் திருமணத்தில் அவர் கலந்து கொள்ளவில்லை.

இந்நிலையில், அதிகாரி சந்தனராஜ் அவர்களுக்கு டிஜிபி சைலேந்திரபாபு ஆறுதல் கடிதம் எழுதியிருக்கிறார்.

அந்த கடிதத்தில், தங்கள் மகளின் திருமண நிச்சயதார்த்த நிகழ்ச்சி நடைபெற இருந்ததும், அதில் கலந்துகொள்ள தங்களுக்கு விடுப்பு மறுக்கப்பட்டதும் காணொளி வாயிலாக கண்டறிந்தேன்.

தங்களின் மகளின் நிச்சயதார்த்த நிகழ்ச்சி தடைப்பட்டதை அறிந்து நான் மிகுந்த மன வருத்தமடைந்தேன்.

இது போன்ற முக்கிய குடும்ப நிகழ்வுகளில் காவல் அதிகாரிகள் மறுக்கக் கூடாது என்பதை மேலதிகாரிகளிடம் வலியுறுத்தப்பட்டுள்ளது.

வரும் நாள்களில் தங்களது மகளின் நிச்சயதார்த்த நிகழ்ச்சி நடத்த ஏதுவாக போதுமான நாள்கள் விடுப்பு வழங்குமாறு மாவட்ட காவல் கண்காணிப்பாளருக்கு அறிவுறுத்தப்பட்டிருக்கிறது.

இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.

Comment here