மதுரை ஆவின் பால் தட்டுப்பாடு மாநகரில் பல்வேறு இடங்களில் பால் விநியோகம் இல்லாததால் பொதுமக்கள் அவதி.

மதுரை மாநகர் TVS நகர், அழகப்பன் நகர், பழங்காநத்தம், திருவள்ளுவர் நகர் , முத்துப்பட்டி உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள 20க்கும் மேற்பட்ட ஆவின் டெப்போக்களுக்கு காலை 3மணிக்கு வர வேண்டிய பால்பாக்கெட்டுகள் வராத நிலையில் முகவர் கடும் பாதிப்பு.

பல்வேறு இடங்களிலும் பால் விநியோகம் செய்யாத நிலையில் பொதுமக்கள் பால் டெப்போக்களை முற்றுகையிட்டு வருகின்றனர்.

4மணி நேரம் தாமதமான நிலையிலும் இதுவரை பால்விநியோகம் செய்யாததால் பொதுமக்கள் ஆவின் பால்பாக்கெட்டுகள் கிடைக்காமல் அவதி.

தினசரி பால் அட்டைதாரர்கள், முதியவர்கள், குழந்தைகள் சிரமமடைந்துவருகின்றனர்.

ஆவின் நிர்வாகம் தரப்பில் விரைவில் விநியோகம் செய்யப்படும் என கூறப்பட்ட நிலையில் தொடர்ந்து பால் விநியோகம் தாமதம்.