மத்திய அரசின் திட்டங்களுக்கு திமுக அரசு தன்னுடைய இனிஷியலை போட்டுக் கொள்கிறது
முன்னாள் மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் பேட்டி
மத்திய பாஜக அரசு செயல்படுத்தும் திட்டங்களை தமிழக திமுக அரசு தன்னுடைய திட்டங்கள் போல தன்னுடைய இனிசியல் போடும் வேலையை செய்கிறது. கர்நாடகாவில் மேகதாதுவில் அணைகட்ட வாய்ப்பில்லை. தமிழகத்தின் ஒப்புதல் இன்றி கர்நாடகா அரசு எதுவும் செய்ய முடியாது. கர்நாடகாவில் பாஜக அரசு இருந்தபோதே தமிழக பாஜக அதனை எதிர்த்து வந்துள்ளது. மத்திய அரசு கொண்டுவரும் விவசாயிகள் நலத்திட்டங்களிலும், சுகாதாரத் திட்டங்களிலும் தமிழக மக்களை சேர்க்க வைப்பதற்கு தமிழக அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. பாமர மக்களுக்கு தேவையான உதவிகளை மோடி அரசு கொடுக்கிறது திமுக அரசு தடுக்கிறது.
இவ்வாறு மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் கூறினார்
Leave A Comment