இல்லறம்

மனைவி அமைவதெல்லாம் இறைவன் கொடுத்த வரம்

Rate this post

முதலாவதாக மனைவியையும் மனைவி வீட்டாரையும் மரியாதை கொடுத்து மதிக்க பழகுங்கள்.
மனைவியுடன் சண்டை வரும் போது மனைவி வீட்டாரை இழுக்காதீர்கள்.
மனைவியின் உடல் குறைகளை குத்திக் காட்டிப் பேசாதீர்கள்.
ஒரு போதும் தரக்குறைவான வார்த்தைகளைப் பாவிக்காதீர்கள்.
மனைவியுடன் வெளியே போகும் போது சிடு மூஞ்சியாக இல்லாமல் இயல்பாக கூட்டிப் போங்கள்.
உங்கள் பெற்றோரிடம்
மனைவியைப் பற்றிப்
பெருமையாகக் கூறுங்கள்.
வெளியே இருக்கும் போது தொலைபேசியில் பேசி உனக்கு ஏதாவது வேண்டுமா…
சாப்டியா… என அக்கரையுடன் விசாரியுங்கள்.
மனைவி ஆசைப்படுவதை
உணர்ந்து முடியுமான வரை
வாங்கிக் கொடுங்கள்.
அடிக்கடி வெளியே கூட்டிச் செல்லுங்கள்.
மனைவியின் சமையலை குறை கூறாமல் பக்குவமாக புரிய வையுங்கள்.
முடியும் பொழுது நீங்க சமையல் செய்து மனைவியை அசத்துங்கள்.
அடிக்கடி அன்பாக தோளில்
தடவி பேசுங்கள்.
முடியும் பொழுதெல்லாம் சிறு சிறு தொகை பணம் கொடுத்து வையுங்கள்.அது பிற்காலத்தில்
உதவெல்லாம்.
அடிக்கடி அவள் பிறந்த வீட்டிற்கு கூட்டிச் செல்லுங்கள்.
மனைவி உடல்நிலை சரியில்லை என்றால் நீங்கள் விடுமுறை எடுத்து அவளைப் அன்புடன் பார்த்துக் கொள்ளுங்கள்.
அவளின் உடல் ஆரோக்கியத்தில் கவனம் எடுங்கள்.
வீட்டில் அவள் எடுக்கும் முடிவுகளை மறுக்காதீர்கள்…
தவறாயின் புரிய வையுங்கள்.
அடிக்கடி அவளின் நல்ல செயல்களைப் பாராட்டுங்கள்.
நீ எனக்கு கிடைத்தது என் அதிர்ஸ்டம் என்று கூறுங்கள்.
உங்கள் வெளி விடயங்களை இரவில் மனைவியுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.
அவளின் நீண்ட கால விருப்பங்களை அறிந்து நிறைவேற்றி வையுங்கள்.
மனைவியாக இருந்தாலும் ஒரு பெண்ணிற்கான மரியாதையை கொடுங்கள்.
அவளிற்கு பிடிக்காத விடயங்களை தவிருங்கள்.
முக்கியமாக திடீர் என நண்பர்களுடன் வந்து நிக்காதீர்கள்.
இறையச்சத்துடன் வாழப் பழகிக்
கொள்ளுங்கள்.
உங்களை ஜோடிகளாகப்
படைத்தோம்.
நீங்கள் அமைதி பெற உங்களிலிருந்தே துணைவியரை உங்களுக்காகப் படைத்து உங்களுக்கிடையே அன்பையும், இரக்கத்தையும் ஏற்படுத்தியிருப்பது அவனது சான்றுகளில் ஒன்றாகும். சிந்திக்கின்ற சமுதாயத்திற்கு இதில் பல சான்றுகள் உள்ளன.
என்றும் உங்களுடன்…
[4/17, 22:45] Cns Kumar: அன்புள்ள கணவா!
நிறைமாத கர்ப்பிணியாய்
இருந்த போது
நிதானமாய் எழு என்றாய்
திரும்பிப் படுக்கையில்
பார்த்து கவனமா திரும்புடா
என்றாய்
வேகமாய் நடந்தால்
மெதுவா நடம்மா என்பாய்
கீழே அமர்ந்து எழுகையில்
கை கொடுத்து தூக்கி விட்டாய்
தலை குளித்து வந்தால்
தலை துவட்டி விடுவாய்
எட்டாவது மாதத்தில்
நம் குழந்தை
எட்டி உதைக்கையில்
வயிற்றை தொட்டு ரசித்தாய்
மாலையில் என் கை பிடித்து
என்னை நடக்க வைத்தாய்
இரவில் உன் கால் பட்டுவிடுமென
கட்டிலிலிருந்து கீழே
இறங்கி படுத்தாய்
பிரசவ வலியால் துடித்த போது
கைக்குட்டையால் என்
கண்ணீர் துடைத்தாய்
மருத்துவமனை வாசலில் நின்று
வருந்தி அழுதாய்
என்னால் தானே உனக்கு
இந்த வலி? என்றாய்
குழந்தையை கையில் வாங்கியதும்
என் தலை கோதி நன்றி சொன்னாய்
அதோடு உன் அக்கறை முடிந்து விட்டதா கணவா?
பழயவை கிடைக்க
பழையபடி கர்ப்பமாகத்தான் வேண்டுமா ?

ஒரே ஒரு முறை கை கொடுத்து
தூக்கி விடேன்
ஒரு முறையேனும்
தையலிட்ட என் வயிற்றை
தடவி கொடேன்
கணவா !
ஒரு கணமேனும்
என் தலையை கோதி விடேன்
தவிக்கிறது மனது .
என்றும் உங்களுடன்

Comment here