வரலாறு

மாசிலாமணி நாதர் , அலை பாடும் தரங்கம் பாடி

Rate this post

அண்மையில் சில கட்டுரைகளில் தரங்கம்பாடியைப்பற்றியே அதிகம் எழுதவேண்டி இருந்தது .

கடந்த சில நூற்றாண்டுகளில் ஐரோப்பியர்களின் குடியேற்றம் மலபார் என்று அவர்களால் அழைக்கப்பட்ட அப்போதைய தமிழ்நாட்டில் தரங்கம் பாடி பரங்கிப்பேட்டை சதுரங்க பட்டினம் ,நாகப்பட்டினம் போன்ற கடல் சார்ந்த இயற்க்கைத்துறைமுகங்களிலேயே அமைந்திருந்தது

.அவைகளே அப்போது பெரிய வணிக பட்டணங்களாகவும் அமைந்திருந்தது .பட்டினம் என்பது நெய்தல் நிலத்தவர் அதிகம் வாழ்ந்தத்துறைமுகம்

அங்கேயே தமிழ் நாட்டின் அனைத்து பகுதியில் வசித்த தமிழ் மருத்துவர்கள் வணிகம் தேடி வந்து போயிருக்கின்றனர் அவைகள் எல்லாம் ஐரோப்பியர்களின் தினசரி குறிப்புகளில் கிடைக்கிறது அதன் தொடர்ச்சியாக இன்றும் நிறைய தமிழ் மருத்துவர்கள் இன்னமும் அத்தகைய துறைமுக நகரங்களில் வாழ்வது இன்னமும் தொடருகிறது .

டேனிஷ் நாட்டினரின் வருகையில் 1620 தரங்கம் பாடி ஒரு சிறந்த துறைமுகமாக விளங்கியது .தரங்கம் பாட்டியின் உரிமையை டேனிஷ் காரர்கள் தங்கத்தால் ஆன சுவடியில் எழுதி வாங்கினர் .அத்தனை உயர்வாக அவர்கள் தரங்கம் பாடியை மதித்தனர் .

அதற்க்கு முன்பே சுமார் 14 ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்ட மாசிலாமணி நாதர் கோயில் எனும் அழகிய கடற்கரை கோயிலும் அங்கு இருந்தது .கடல் அலைகள் இசை பாடுவதுபோல இருப்பதால் தரங்கம்பாடி என்று பெயர் பெற்றதாகக் கூறுவர்

இக்கோயிலில் உள்ள மூலவர் மாசிலாமணிநாதர் ஆவார். இறைவி அகிலாண்டேஸ்வரி ஆவார். கடல் அலைகள் மோதி மூலவர் கருவறையைத் தவிர அனைத்தும் இடிபாடான நிலையில் இருந்தஅந்தக்கோயில் தற்போது திருப்பணி பெற்றுள்ளது
குலசேகரன்பட்டினம், சடகன்பாடி என்ற பெயர்களில் கல்வெட்டுக்களில் குறிப்பிடப்பட்டுள்ளன. குரா மரத்தைத் தல மரமாகக் கொண்டதால் திருக்குராச்சேரி என்று அழைக்கப்பட்டு, இருக்கிறது .

அப்பர் பெருமான் “அண்ணாமலை யமர்ந்தார் ஆரூர் உள்ளார் அளப்பூரார் அந்தணர்கள் மாடக்கோயில்……” (6.51.3) என்றும், “எச்சில் இளமர் ஏமநல்லூர் இலம்பையங் கோட்டூர் இறையான் சேரி அச்சிறு பாக்கம் அளப்பூர் அம்பர்…” (6.70.4) என்றும், “…உறையூரும் ஓத்தூரும் ஊற்றத்தூரும் அளப்பூர் ஓமாம்புலியூர் ஒற்றியூரும்…..” (6.71.4) என்றும், சுந்தரர் “ஆரூர் அத்தா ஐயாற்றமுதே அளப்பூர் அம்மானே…” (7.47.4) என்றும் இந்த வைப்புத்தலம் குறித்துப் பாடியுள்ளனர்.

அளம் என்றால் உப்பு எடுக்கும் இடமாகும் அது அளப்பூர் ஆனது போலும்

ஆங்கிலேயர் ஆட்சியிலும் 1845 முதல் 1862 வரை ஒருங்கிணைந்த தஞ்சை மாவட்டத்தின் தலை நகராகவும் தரங்கம் பாடி விளங்கியது
சொல்ல இன்னமும் நிறைய இருக்கிறது
அண்ணாமலை சுகுமாரன்

Comment here