Tamilnadu

மாற்றுத்திறனாளி குடும்பத்தினரை தாக்கிய 2 பேர் கைது…!

Rate this post

திருவாரூர் அருகே மாற்றுத்திறனாளி குடும்பத்தினரை தாக்கிய 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

திருவாரூர் மாவட்டம்,கச்சாய் அருகே உள்ள படித்தான் தோப்பு பகுதியை சேர்ந்த ராமமூர்த்திக்கும் அதே பகுதியைச் சேர்ந்த ராதா மற்றும் லெனின் இவர்களுக்கும் வேலி அமைப்பது தொடர்பாக பிரச்சனை இருந்து வந்துள்ளது.

கடந்த மாதம் ராதா, லெனின் மற்றும் வாசன் உள்ளிட்டோர் ஒன்று சேர்ந்து ராமமூர்த்தி மற்றும் அவரது மனைவி மகள் மகன் உள்ளிட்டோரை கடுமையாக தாக்கியுள்ளனர்.

இதுகுறித்து திருத்துறைப்பூண்டி காவல் நிலையத்தில் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை எனக்கூறி ராமமூர்த்தி குடும்பத்தினரை தாக்கும் சிசிடிவி காட்சிகளை காண்பித்து திருவாரூர் மாவட்ட வருவாய் ஆய்வாளர் சிதம்பரத்திடம் மனு அளித்தனர்.

மேலும் சமூக வலைத்தளங்களில் ராமமூர்த்தி குடும்பத்தினர் தாக்கப்படும் சிசிடிவி காட்சிகள் வெளியானது. இதனையடுத்து ராதா மற்றும் மண் மண்மலைவாசன் ஆகியோரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Comment here