தொழில்

மின்சாரம் தாக்கி விவசாயி பரிதாப பலி..!

Rate this post

திருவாரூர் மாவட்டம் தண்டலை ஊராட்சி மேப்பாடி பகுதியை சேர்ந்தவர் சோமசுந்தரம்.

இவர் மேம்பாடி அருகே வயலில் வேலை பார்த்துக் கொண்டிருந்தபோது வயலில் பயன்பாடு இல்லாத மின் கம்பத்தில் சுற்றப்பட்டு இருந்த கம்பி வேலியில் கை வைக்கும் பொழுது பயன்பாடு இல்லாமல் இருந்த மின்கம்பத்தில் உள்ள மீட்டர் பெட்டியில் ஏற்கனவே இருந்த மின் இணைப்பு துண்டிக்கப்படாததால் வந்த மின்சாரத்தினால் மின்சாரம் தாக்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

உயிரிழந்த சோமசுந்தரத்திற்கு மனைவி மற்றும் ஆர்த்தி, பாலா என இரு குழந்தைகள் உள்ளனர்.

மேலும் இது குறித்து தாலுக்கா காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் சோமசுந்தரத்தின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு போலீசார் அனுப்பி வைத்தனர்.

இச்சம்பவத்திற்கு காரணம் வயல்வெளிகளில் போடப்பட்டிருந்த மின் கம்பங்களில் வழியாக செல்லும் மின் கம்பிகள் மிகத் தாழ்வாக செல்வதாகவும் மின்கம்பிகள் பழுதடைந்து ஆங்காங்கே அருந்து விழும் நிலையில் உள்ளதாகவும் அங்குள்ள விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

மேலும் சில நாட்களாக பெய்த காற்று மழை காரணமாக அந்த பயன்பாடு இல்லாத மின்கம்பத்தில் உள்ள மின் பெட்டியில் மின் இணைப்பு துண்டிக்கப்படாததால் அதனோடு இணைத்து கட்டப்பட்ட கம்பிவேலியில் பல கீரிப்பிள்ளைகள் மற்றும் அனில்கள் செத்து கிடந்தன என்பது குறிப்பிடத்தக்கது

மேலும் இது போன்ற சம்பவங்கள் நடைபெறாமல் இருக்க மின்சார வாரியம் ஆங்காங்கே பழுதடைந்து உள்ள மின்கம்பங்கள் மற்றும் மின் கம்பிகளை புதிதாக அமைத்து தர பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

Comment here