India

மியான்மரில் சிக்கி தவித்த 13 தமிழர்கள் டெல்லி வந்தடைந்தனர்

4/5 - (1 vote)

மியான்மரில் சிக்கி தவித்த 13 தமிழர்கள் டெல்லி வந்துள்ளனர்.

தாய்லாந்தில் வேலை எனக்கூறி அழைத்துச்செல்லப்பட்ட தமிழர்கள் சிலர் மியான்மர் நாட்டுக்கு கடத்திச் செல்லப்பட்டார்கள்.

இதையடுத்து மியான்மரில் சிக்கி தவித்த தமிழர்களை மீட்க பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதினார்.

இதனையடுத்து பல கட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளநப்பட்டன.

இந்நிலையில் மியான்மரில் மோசடி கும்பலிடம் சிக்கிய தமிழர்கள் 13 பேர் வெளியுறவுத்துறை அமைச்சகம் மூலம் மீட்கப்பட்டு இன்று இரவு 8 மணிக்கு தாயகம் திரும்பியதாக தகவல் வெளியாகி உள்ளது.

அதன்படி, மியான்மரில் சிக்கி தவித்த 13 தமிழர்கள் தனி விமானம் மூலம் டெல்லி விமான நிலையம் வந்தடைந்தனர்.

Comment here