World

மியான்மரில் பள்ளியை குறி வைத்து ராணுவ ஹெலிகாப்டர்கள் நடத்திய துப்பாக்கிச் சூடு தாக்குதல்- 7 குழந்தைகள் பரிதாப பலி

Rate this post

மியான்மரில் பள்ளியை குறி வைத்து ராணுவ ஹெலிகாப்டர்கள் நடத்திய துப்பாக்கிச் சூடு தாக்குதலில் 7 குழந்தைகள் பரிதாப பலியாகியுள்ளனர்.

7 குழந்தைகள் பரிதாப பலி

மியான்மரில் உள்ள பள்ளி ஒன்றின் மீது ராணுவ ஹெலிகாப்டர்கள் நடத்திய துப்பாக்கிச் சூடு தாக்குதலில் 7 குழந்தைகள் உட்பட 13 பேர் பரிதாபாக உயிரிழந்தனர். மேலும், 17 பேர் காயமடைந்தனர்.

மத்திய சகாயிங் பிராந்தியத்தில் உள்ள லெட் யெட் கோன் என்கிற கிராமம் உள்ளது. இந்த கிராமத்தில் புத்த மடாலயத்தில் பள்ளி ஒன்று உள்ளது.

இந்த பள்ளியின் மீது ராணுவ ஹெலிகாப்டர்கள் துப்பாக்கிச் சூடு நடத்தியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்தத் துப்பாக்கிச் சூட்டில் சில குழந்தைகள் சம்பவ இடத்திலேயே பலியாகியுள்ளனர். மேலும், கிராமத்திற்குள் நுழைந்த ராணுவத்தினர் மக்கள் மேல் தாக்குதல் நடத்தியுள்ளனர்.

இத்தாக்குதலில் இறந்தவர்களின் உடல்கள் இராணுவத்தால் 11 கிலோமீட்டர் தொலைவில் உள்ள நகரத்திற்கு கொண்டு செல்லப்பட்டு புதைக்கப்பட்டதாக செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

Comment here