Game

முதல் டி20 போட்டி: ஆஸ்திரேலியா – வெஸ்ட் இண்டீஸ் அணிகள் இன்று நேருக்கு நேர் மோதல்

4/5 - (2 votes)

டி20 உலகக்கோப்பை தொடர் வரும் 16ம் தேதி ஆஸ்திரேலியாவில் தொடங்க இருக்கிறது.

இப்போட்டியில் பங்குபெறும் நாடுகள், போட்டிகளில் விளையாடுவதற்காக ஆஸ்திரேலியாவுக்கு செல்ல தயாராகி வருகிறது.

இந்நிலையில் ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள வெஸ்ட் இண்டீஸ் அணி அங்கு 2 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடுகிறது.

இந்தியாவுக்கு எதிரான டி20 தொடரை இழந்த பின ஆஸ்திரேலிய அணி சொந்த மண்ணில் விளையாட இருக்கிறது.

ஆஸ்திரேலிய அணியில் பெரிதும் மாற்றம் இல்லாமல் இந்திய அணிக்கு எதிரான தொடரில் இடம்பெற்றுள்ள வீரர்கள் அப்படியே இடம் பெற்றுள்ளனர். வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு நிகோலஸ் பூரன் தலைமை தாங்குகிறார்.

Comment here