ஒசூர் அருகே வயல் வெளியில் சாய்ந்து கிடந்த மின்கம்பம்
மேய்ச்சலுக்கு சென்ற 3கறவை மாடுகள் உட்பட 4 மாடுகள் மின்வயர் உரசி உயிரிழந்த சோகம்
கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூர் அடுத்த சீபம் கிராமத்தில் உள்ள கறவை மாடுகள் அருகே உள்ள விளைநிலங்களில் நண்பகல் வரை மேய்ச்சலில் விட்டு பின்னர் அழைத்து செல்வது வழக்கம்..
நேற்று இரவு சூளகிரி பகுதிகளில் பலத்த காற்றுடன் மழை பெய்தது அப்போது சீபம் கிராமத்தில் முனுசாமி என்பவருக்கு சொந்தமான விளைநிலத்தில் மின்கம்பம் சாய்ந்து விழுந்துள்ளது
மின்கம்பங்கள் வயலில் 200 மீட்டர் தூரத்திற்கு விழுந்திருந்தபோதும் மின்சாரம் நிறுத்தப்படாததால் வழக்கம்போல மேய்ச்சலுக்கு சென்ற கறவை மாடுகளில் சின்ன மாதேவப்பா(40) என்பவருக்கு சொந்தமான 3 கறவை பசுமாடுகள், ஒரு நாட்டுயின பசுமாடு என 4 மாடுகள் மின்கம்பம் உரசி அடுத்தடுத்து மாடுகள் சுருண்டு விழுந்து உயிரிழந்துள்ளது..
இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த அப்பகுதியினர் அளித்த தகவலின்பேரில் சூளகிரி மின்வாரியத்திற்கு தகவல் அளித்து மின்சாரத்தை நிறுத்தினர்..
இதுக்குறித்து கிராம மக்கள் கூறுகையில், வயல்பகுதியில் லேசாக மின்கம்பம் நட்டதும், மழை காலங்களில் மின்கம்பங்களை பார்வையிடாமல் அலட்சியமாக செயல்பட்டதே 2 லட்சம் ரூபாய் மதிப்பிலான மாடுகள் உயிரிழந்ததற்கான காரணம் என தெரிவிக்கின்றனர்
கறவை மாடுகள் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்ப்படுத்தி உள்ளது.
Leave A Comment