வரலாறு

யார் கிருஷ்ண பக்தன்

Rate this post

கிருஷ்ணன் பிறந்த தினமாக நாடெங்கும் கொண்டாடப்படுகிறது .ஹரேராம ஹரே கிருஷ்ணா இயக்கம் உலகெங்கும் பரவியிருக்கிறது .

வரவரலாற்றில் முதலில் கிருஷ்ணரை ஆராதித்த ஒரு யவனரைப்பற்றிய செய்தி இது .

ஹேலியோடோரஸ் தூண் (Heliodorus pillar) இது கிருஷ்ணருக்காக ஹேலியோடோரஸ்எனும் ஒரு யவனரால் உருவாக்கப்பட்டதாகும்
மத்திய இந்தியாவின் சாஞ்சிக்கு அருகில் ஐந்து மைல் தொலைவில், விதிஷா நகரதில் உள்ளது விதிஷா மாவட்டம், மத்தியப் பிரதேச மாநிலத்தில் உள்ளது.இத்தூண்,

இந்து சமயத்திற்கு மதம் மாறியவரும், சுங்கப் பேரரசில், இந்தோ கிரேக்க நாட்டின் தூதுவரும், கிருஷ்ண பக்தருமான ஹேலியோடோரஸ் (Heliodorus (votive erector) என்பவரால், கி மு 113இல் பகவான் கிருஷ்ணருக்காக நிறுவப்பட்டது. கிருஷ்ணர் கோயில் முன் அமைந்த இத்தூணின் உச்சியில் கருடச் சிற்பம் அமைந்துள்ளது

கி மு 113 லேயே துவாரகை கிருஷ்ணருடைய புகழ் இந்தியாவெங்கும் பரவியிருந்தது .
தெரிகிறது . கிருஷ்ணர் என்றால் கருமை நிறம் உடையவர் .

ஹேலியோடோரஸ் தூணில் இரண்டு கல்வெட்டுக் குறிப்புகள் உள்ளது.பிராமி எழுத்தில் பிராகிருத மொழியில் உள்ள முதல் கல்வெட்டு, ஹேலியோடோரசின் நிலையையும், அவருக்கும் சுங்கப் பேரரசு மற்றும் இந்தோ கிரேக்க நாட்டிற்கும் இருந்த அரசியல் உறவுகளையும் விளக்குகிறது

.இரண்டாவது கல்வெட்டில், கருடனை வாகனமாகக் கொண்ட வாசுதேவனின் பக்தரும், தக்சசீலாவின் தியோன் என்பவரின் மகனுமான ஹேலியோடோரசன் பெயர் கொண்ட நான், யவன நாட்டின் சக்கரவர்த்தியான ஆண்டியல்கிதாஸ் என்பவரால், காசி நாட்டு மன்னரவையில் தூதராக நியமிக்கப்பட்டேன் என உள்ளது

இதைப்பற்றிய அரசு கல்வெட்டு மற்றும் படங்களும் இணைக்கப்பட்டுஉள்ளது .அரசின் கல்வெட்டில் கிருஷ்ணர் அதிகமாக மீனவர்களால் அப்போது ஆராதிக்கப்பட்டதாக எழுதி இருக்கிறது .கிருஷ்ணருக்கும் மீனவர்களுக்கும் இருந்த தொடர்பு ஆராயப்படவேண்டும் .இப்போதும்தசமிழ்நாட்டில் யாதவர்களைப்போல் மீனவர்களும் இந்த திருநாளை அவரகள் வீட்டில் அதிகம் கொண்டாடுவார்கள் .

அண்ணாமலைசுகுமாரன்

ஆதாரம் https://ta.wikipedia.org/wiki/%E0%AE%B9%E0%AF%87%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8B%E0%AE%B0%E0%AE%B8%E0%AF%8D_%E0%AE%A4%E0%AF%82%E0%AE%A3%E0%AF%8D

Comment here