Cinema

ரசிகர்களால் பயந்துபோன கரீனா கபூர் – இணையதளத்தில் வைரலாகும் வீடியோ..

2/5 - (2 votes)

பாலிவுட் திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் கரீனா கபூர். இவர் சமீபத்தில் தன் 42-வது பிறந்தநாளை கொண்டாடினார்.

இவரது பிறந்தநாள் கொண்டாட்டத்தில் ரன்பீர் கபூர், ஆலியா பட், கரண் ஜோக்கர் உள்பட பல திரைப்பிரபலங்கள் கலந்து கொண்டார்கள்.

இந்நிலையில் கரீனா கபூர் இவர் சமீபத்தில் மும்பை விமான நிலையத்திற்கு சென்றிருக்கிறார்.

அப்போது காரிலிருந்து இறங்கிய நடிகை கரீனா கபூரை ரசிகர்கள் பார்த்ததும் பலர் செல்ஃபி எடுக்க சூழ்ந்துள்ளனர்.

இதனையடுத்து புகைப்படம் எடுப்பதில் ஆர்வமாக இருந்த ரசிகர்கள் பலர் அவரை தள்ளினர். இதனால் கரீனா கபூர் பயந்தார்.

இதைத்தொடர்ந்து பாதுகாவலர்கள் ரசிகர்களை அப்புறப்படுத்தினார்கள்.

அதன்பிறகு விமான நிலையத்திற்கு கரீனா கபூர் அவசர அவசரமாக சென்றார். இந்த வீடியோ

தற்போது சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.

Comment here