World

ரஷிய படைகளை பின் வாங்கச் செய்த உக்ரைன் ராணுவம்…!

2.5/5 - (2 votes)

உக்ரைன் மீது ரஷியா 7 மாதங்களுக்கு மேலாக போர் தொடுத்து வருகிறது.

இந்த போரில் உக்ரைன் நாட்டு நகரங்களை ரஷியா படைகள் கைப்பற்றி வருகிறது. அதன்பின் சில பகுதிகள் ரஷியாவிடம் இருந்து உக்ரைன் ராணுவம் மீட்டது.

சமீபத்தில் போரில் கைப்பற்றிய உக்ரைனின்4 பிராந்தியங்களை ரஷியாவுடன் இணைப்பதாக அறிவித்தது.

இந்நிலையில் ரஷிய படையிடமிருந்து உக்ரைனின் முக்கிய நகரை உக்ரைன் ராணுவம் மீட்டிருக்கிறது. உக்ரைனின் கிழக்கில் உள்ள லைமன் நகரை ரஷிய படைகள் கைப்பற்றி இருந்தன.

அந்த நகரை மீட்டெடுக்க உக்ரைன் படையினர் தொடர்ந்து சண்டையிட்டு வந்தனர்.

அந்த நகரை உக்ரைன் ராணுவத்தினர் சுற்றி வளைத்ததால் அங்கிருந்து ரஷிய படைகள் பின் வாங்கிக் கொண்டது.

இது ரஷியாவுக்கு பின்னடைவாக கருதப்படுகிறது.

இந்நிலையில் ரஷிய அதிபர் புதினின் ஆதரவாளரான செச்சினியா பிராந்திய தலைவர் கதிரோவ் கூறுகையில், “எனது தனிப்பட்ட கருத்துப்படி கடுமையான நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். குறைந்த பாதிப்பு கொண்ட அணு ஆயுதத்தை உக்ரைனில் பயன்படுத்து வதை ரஷியா பரிசீலிக்க வேண்டும்” என்றார்

Comment here