World

ராணி 2ம் எலிசபெத்தின் இறுதிச்சடங்கு – 100 தியேட்டர்களில் திரையிட முடிவு

Rate this post

ராணி 2ம் எலிசபெத்தின் இறுதிச்சடங்கு  நிகழ்ச்சியை 100 தியேட்டர்களில் திரையிட முடிவு செய்யப்பட்டுள்ளது.

ராணி 2-ம் எலிசபெத்

இங்கிலாந்து நாட்டு ராணி 2-ம் எலிசபெத் கடந்த 8-ம் தேதி உயிரிழந்தார். அவருக்கு வயது 96.

அவரது மறைவிற்கு பிரதமர் மோடி உள்ளிட்ட உலக நாடுகளின் தலைவர்கள் பலர் இரங்கல் தெரிவித்தனர்.

இந்நிலையில் ராணி எலிசபெத் இறுதிச்சடங்கு நாளை நடைபெற உள்ளது. ராணி எலிசபெத்தின் இறுதிச்சடங்கில் பங்கேற்பதற்காக உலகத் தலைவர்கள் இங்கிலாந்திற்கு படையெடுத்திருக்கின்றனர்.

125 திரையரங்குகளில் சடங்கு நிகழ்ச்சிகளை ஒளிபரப்ப முடிவு

இதனால் பிரிட்டன் முழுவதும் சுமார் 125 திரையரங்குகளில் சடங்கு நிகழ்ச்சிகளை ஒளிபரப்ப முடிவு செய்யப்பட்டிருக்கிறது.

திரையரங்குகள் மட்டுமின்றி பூங்காக்கள், சதுரங்கள் உள்ளிட்ட பொது இடங்களிலும் சடங்கு நிகழ்வுக்கான காட்சிகளை காண்பிக்க திரைகள் அமைக்கப்பட உள்ளன.

சினிமா திரையிடல்களுக்கு அனுமதி இலவசம் என்று சினிமா சங்கம் அறிவித்துள்ளது. வெஸ்ட்மின்ஸ்டர் அபே பகுதியில் இறுதிச் சடங்குகள் மற்றும் லண்டன் முழுவதும் நடைபெறும் ஊர்வலங்களும் பிபிசி, ஐடிவி மற்றும் ஸ்கை மூலம் தொலைக்காட்சியில் நேரடியாகக் காண்பிக்கப்பட உள்ளன.

பொது விடுமுறை

1997-ல் இளவரசி டயானாவின் இறுதிச் சடங்குகள், 2012 லண்டன் ஒலிம்பிக்ஸ் மற்றும் அரச திருமணங்கள் உள்பட சமீபத்திய பிரிட்டிஷ் வரலாற்றின் பிற முக்கிய நிகழ்வுகளை விட கூட்டம் அதிகம் இருக்கும் எனவும் இறுதிச்சடங்கிற்கு அரசாங்கம் பொது விடுமுறையை அறிவித்திருக்கிறது.

Comment here