India

ராணி 2ம் எலிசபெத் உடலுக்கு அஞ்சலி செலுத்த இங்கிலாந்து புறப்பட்டார் திரௌபதி முர்மு..!

Rate this post

ராணி 2ம் எலிசபெத் உடலுக்கு அஞ்சலி செலுத்த இங்கிலாந்து இந்திய குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு புறப்பட்டுச் சென்றார்.

இங்கிலாந்து ராணி இரண்டாம் எலிசபெத்தின் இறுதிச் சடங்கில் ஜனாதிபதி திரௌபதி முர்மு கலந்து கொண்டு இந்திய அரசின் சார்பில் இரங்கல் தெரிவிக்க இருக்கிறார்.

பிரிட்டன் ராணி 2ம் எலிசபெத் வயது முதிர்வு மற்றும் உடல்நலக் குறைவு காரணமாக கடந்த 8ம் தேதி உயிரிழற்ந்தார்.

பிரிட்டன் ராணி 2ம் எலிசபெத்திற்கு அஞ்சலி செலுத்தும் விதமாக, நாடு முழுவதும் துக்கம் அனுசரிக்கப்பட்டு வருகிறது.

இதனையடுத்து, பிரிட்டன் புதிய அரசராக, அவரது மூத்த மகன், சார்லஸ் பொறுப்பேற்றார்.

இங்கிலாந்து ராணி எலிசபெத்தின் இறுதிச்சடங்கு வரும் 19-ந் தேதி நடைபெற உள்ளது.

இந்த இறுதிச் சடங்கில் பங்கேற்க உலக தலைவர்கள் வருகை தர உள்ளனர்.

லண்டனில் வெஸ்ட் மின்ஸ்டர் மண்டபத்தில் மேடையில் ராணியின் உடல், அரச மரியாதையுடன், அவரின் கிரீடத்துடன் வைக்கப்பட்டிருக்கிறது. வெஸ்ட் மின்ஸ்டர் அபேயில் கடந்த ஆண்டு மறைந்த ராணியின் கணவர் அரசர் பிலிப் அடக்கம் செய்யப்பட்ட இடம் அருகே, ராணியின் உடல் நல்லடக்கம் செய்யப்பட உள்ளது.

இந்நிலையில் இங்கிலாந்து ராணி எலிசபெத்தின் இறுதிச் சடங்கில் கலந்து கொள்ள, ஜனாதிபதி திரவுபதி முர்மு விமானம் மூலம் லண்டன் புறப்பட்டார்.

 

Comment here