Tamilnadu

ராமஸ்வரத்தில் ஓ.பன்னீர்செல்வம் குடும்பத்தினருடன் சிறப்பு வழிபாடு – வைரல் புகைப்படம்

Rate this post

ராமஸ்வரத்தில் ஓ.பன்னீர்செல்வம் குடும்பத்தினருடன் சிறப்பு வழிபாடு செய்தார்.

ஓ.பன்னீர்செல்வத்துடன் ராமஸ்வரத்தில் வழிபாடு

முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தனது குடும்பத்தினருடன் இன்று அதிகாலையில் ராமேஸ்வரத்தில் ராமநாதசுவாமி கோவிலில் சாமி தரிசனம் செய்தார்.

ஓ.பன்னீர்செல்வத்துடன் அவருடைய மகன் ஜெயபிரதீப், மருமகள், பேரக்குழந்தைகள் வந்துள்ளனர்.

ராமேஸ்வரம் அக்னி தீர்த்த கடலில் புனித நீராடிய அவர், ராமநாதசுவாமி கோவிலில் உள்ள 22 புனித தீர்த்தத்தில் நீராடினார்.

அவருடைய மனைவி இறந்த முதல் வருடத்தை முன்னிட்டு ராமேஸ்வரத்தில் உள்ள ஒரு தனியார் மடத்தில் சிறப்பு பூஜைகள் செய்தார்.

இதைத்தொடர்ந்து அவர் காசிக்கு சென்று வழிபாடு செய்ய இருப்பதாக அவரது ஆதரவாளர்கள் தெரிவித்துள்ளனர்.

 

Comment here