Game

ரியோ ஒலிம்பிக் 2016: பிரம்மாண்ட வைபவத்தின் புகைப்படத் தொகுப்பு

5/5 - (1 vote)

                              பிரேசிலில் உள்ள ரியோ டி ஜெனிரோ நகரில் 31வது நவீன கால ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகளின் தொடக்க விழா வைபவம் பிரம்மாண்டமாக நடைபெற்று முடிந்துள்ளது. அதன் புகைப்படத் தொகுப்பு.

ஆண்டிற்கான ஒலிம்பிக் போட்டிகள் பிரேசிலில் உள்ள ரியோ டி ஜெனிரோவில் நடைபெறுகிறது.
           31வது நவீன கால ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகள் பிரேசிலின் ரியோ டி ஜெனெரோவில் பிரமிக்கத்தக்க தொடக்கவிழா வைபவத்துடன் தொடங்கின.
ரியோ நகரின் மரக்கானா விளையாட்டரங்கில் இந்த வைபவம் நடைபெற்றது.
பிரேசிலின் செழுமையான கலாசாரப் பாரம்பரியத்தையும், அதன் பிரசித்திபெற்ற சுற்றுச்சூழலையும் வெளிக்காட்டும், ஒளி, இசை மற்றும் நாட்டிய நிகழ்ச்சிகள் நடந்தேறின.
முன்னாள் பிரேசில் தடகள வீரர் வன்டெர்லெய் கார்டியரோ டி லிமா ஒலிம்பிக் சுடரை ஒலிம்பிக் கொப்பரையில் ஏற்றினார்.
அந்தரத்தில் மிதக்கும் ஒலிம்பிக் கொப்பரை
பிரேசிலின் இடைக்கால அதிபர் மிஷேல் டெமெர் ஒலிம்பிக் போட்டிகளை முறையாகத் தொடங்கிவைத்த போது அவருக்கெதிராக எழுந்த சில கேலிக்குரல்கள், பிரேசிலில் நிலவும் ஆழமான அரசியல் நெருக்கடியை நினைவுபடுத்தின.
உலகின் பல பாகங்களில் அகதிகளாய் வாழ நேர்ந்திருப்போரைப் பிரதிநிதித்துவப் படுத்தும் ஒரு சிறிய குழு ஒன்றும் பெரும் ஆரவார வரவேற்பைப் பெற்றது.
ரியோ ஒலிம்பிக்கில் இந்திய அணியை வழிநடத்தி செல்லும் அபினவ் பிந்த்ரா
மரக்கானா விளையாட்டு அரங்கில் இந்திய ஒலிம்பிக் அணி
மரக்கானா விளையாட்டு அரங்கிற்குள் நுழைந்த இந்திய தடகள வீராங்கனைகள்.
கண்கவர் வாண வேடிக்கைகளால் மரக்கானா விளையாட்டரங்கம் இரவில் ஜொலித்தது.

Comment here