Cinema

ரூ.200 கோடி மோசடி வழக்கு – நடிகை ஜாக்குலினின் ஜாமீன் நீட்டிப்பு – நீதிமன்றம் உத்தரவு

Rate this post

இரட்டை இலை சின்னம் பெற லஞ்சம் கொடுக்க முயன்ற வழக்கில் சுகேஷ் சந்திரசேகர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருக்கிறார்.

இதுதவிர மத்திய சட்ட அமைச்சக உயர் அதிகாரி போல் நடித்து ரூ.200 கோடி மிரட்டி பறித்த வழக்கிலும் அவர் கைது செய்யப்பட்டிருக்கிறார்.

இந்த வழக்கில் கடந்த செப்டம்பர் 26-ந்தேதி ஆஜராக பாலிவுட் நடிகை ஜாக்குலின் பெர்னாண்டசுக்கு டெல்லி சி.பி.ஐ. சிறப்பு கோர்ட்டு உத்தரவிட்டது.

ஜாக்குலினுக்கு ஜாமீன் வழங்க வேண்டும் என அவரது வக்கீல் வாதிட்டார். இதனையடுத்து அவருக்கு இடைக்கால ஜாமீன் வழங்கப்பட்டது.

இந்நிலையில் இந்த வழக்கு விசாரணை நேற்று வந்தது. ஜாக்குலினுக்கு வழங்கிய இடைக்கால ஜாமீனை நவம்பர் 10-ந்தேதி வரை நீட்டித்து நேற்று கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

Comment here