Tamilnadu

ரேஷன் கடைகளில் கண் கருவிழி பதிவு மூலம் பொருட்கள் வழங்கும் திட்டம் – அமைச்சர் சக்கரபாணி, எம்.எல்.ஏ உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைப்பு

Rate this post

ரேஷன் கடைகளில் கண் கருவிழி பதிவு மூலம் பொருட்கள் வழங்கும் திட்டத்தை அமைச்சர் சக்கரபாணி, எம்.எல்.ஏ உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் தொடங்கி வைத்தனர்.

சென்னை, தமிழகத்தில் நியாயவிலைக் கடைகள் மூலம், அனைத்து அட்டைதாரர்களுக்கு குறைந்த விலையிலும், இலவசமாகவும் அரிசி, பருப்புகள் உள்ளிட்ட பொருட்கள் போன்றவை வழங்கப்பட்டு வருகிறது.

ரேஷன் கடைகளில் ரேஷன் பொருட்கள் வாங்குவதற்கான மின்னணு பதிவேடு இயந்திரத்தில் அவ்வப்போது கோளாறுகள் ஏற்படுகிறது.

மின்னணு பதிவேட்டுக்குப் பதிலாக குடும்ப அட்டைதாரர்கள்.

கருவிழி மூலம் பதிவு செய்ய ஏற்பாடு செய்யப்பட்டது.

அதன்படி, ரேஷன் கடைகளில் கண் கருவிழி மூலம் ரேசன் பொருட்கள் வினியோகிக்கும் திட்டத்தை உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி, எம்.எல்.ஏ உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் தொடங்கி வைத்தனர்.

இது குறித்து தமிழக உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி பேசுகையில், முதற்கட்டமாக சென்னை, அரியலூரில் சோதனை அடிப்படையில் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.

கண் கருவிழி சரிபார்ப்பு முறையில் பொருட்கள் வழங்கும் திட்டம் பொதுமக்களிடம் நல்ல வரவேற்பு பெற்றால் இத்திட்டம் தமிழகம் முழுவதும் அமல்படுத்தப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Comment here