India

லதா மங்கேஷ்கரின் 93வது பிறந்தநாள் – அயோத்தியில் 40 அடி வீணையை பிரதமர் மோடி திறந்து வைத்தார்

Rate this post

இந்தியாவின் இசைக்குயில் என்று அழைக்கப்பட்ட பிரபல பின்னணி பாடகி லதா மங்கேஷ்கர் கடந்த பிப்ரவரி மாதம் உடல்நலக் குறைவால் உயிரிழந்தார்.

இன்று அவரது 93வது பிறந்த தினம் கொண்டாடப்பட்டது. இதையொட்டி அயோத்தியாவில் சரயு நதிக்கரையில் 7.9 கோடி மதிப்பில் வீணை நிறுவப்பட்டுள்ளது.

இந்த வீணை 40 அடி நீளமும், 14 டன் எடை கொண்டதாகும். இந்த வீணையை பிரதமர் மோடி காணொலி காட்சி வாயிலாக திறந்து வைத்தார்.

இந்நிகழ்ச்சியில் உ.பி.முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத், சுற்றுலாத்துறை மந்திரி கிஷன் ரெட்டி ஆகியோரும் பங்கேற்றனர்

Comment here