India

வகுப்பறையில் கேட்ட 2ம் வகுப்பு மாணவியின் அழுகுரல் – தலைமையாசிரியர் சஸ்பெண்ட்

Rate this post

உத்தரபிரதேசம், புலந்த்சாகிர் மாவட்டம், செக்டா பிர் பகுதில் பள்ளி ஒன்று உள்ளது. இந்த பள்ளியில் படித்து வந்த 2-ம் வகுப்பு மாணவி நேற்று முன்தினம் மாலையில் வீடு திரும்பவில்லை.

இதனால் அதிர்ச்சி அடைந்த பெற்றோர் உடனடியாக பள்ளிக்கு சென்று இது குறித்து விசாரித்தனர்.

இதனையடுத்து நிர்வாகத்தினர் பள்ளி முழுவதும் தேடினர்.

ஒரு வகுப்பறையில் இருந்து ஒரு அழுகுரல் கேட்டுக்கொண்டிருந்தது.

உடனே கதவை திறந்து பார்த்தபோது, அந்த சிறுமி வகுப்பறையில் அழுது கொண்டிருந்தாள்.

இதன் பிறகு தான் தெரிந்தது பள்ளிக்கூட ஊழியர்கள் தவறுதலாக சிறுமியை வகுப்பறையில் வைத்து பூட்டி விட்டு சென்றுள்ளனர்.

இது குறித்து கல்வி அதிகாரிகள் விசாரணை நடத்தினார். பள்ளி தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியர்கள், குழந்தைகளை ஊழியர்களின் பொறுப்பில் விட்டுவிட்டு முன்னதாகவே வீடு திரும்பியிருந்தது விசாரணையில் தெரிய வந்தது.

இதனையடுத்து, குழந்தைகளின் பாதுகாப்பில் அலட்சியமாக இருந்த தலைமை ஆசிரியர், 4 ஆசிரியர்கள் மற்றும் 3 ஊழியர்களை பணியிடை நீக்கம் செய்து அதிகாரிகள் நடவடிக்கை எடுத்தனர்.

Comment here