India

வகுப்பறையில் மாணவியின் சீருடையை கழற்ற வைத்த ஆசிரியர் – ம.பி.யில் அதிர்ச்சி சம்பவம்

Rate this post

மத்திய பிரதேச மாநிலத்தில், 5ம் வகுப்பு மாணவியின் சட்டையை ஆசிரியர் கழற்ற வைத்த சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மத்திய பிரதேச மாநிலம், ஷாதால் மாவட்டத்தில் பழங்குடியினர் விவகாரத்துறை சார்பில் அரசு துவக்கப் பள்ளி நடத்தப்பட்டு வருகிறது.

சீருடையை கழற்ற வைத்த ஆசிரியர்

அப்பள்ளியில் 5ம் வகுப்பு படிக்கும் மாணவி அழுக்கு உடையில் பள்ளிக்கு வந்துள்ளார். அழுக்கு படிந்த சீருடை அணிந்து வந்த அந்த மாணவியின் ஆடைகளை, சக மாணவிகள் முன்னிலையில் கழற்ற வைத்துள்ளார். பின்னர் அந்த துணியை துவைக்க வைத்துள்ளார்.

இது தொடர்பான புகைப்படங்கள் சமூக வலைத்தளத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. இதைப் பார்த்த நெட்டிசன்கள் கண்டனங்கள் தெரிவித்து வருகின்றனர்.

வீடியோ வைரலானதையடுத்து, தற்போது சம்பந்தப்பட்ட ஆசிரியர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். மேலும், இது தொடர்பாக விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

Comment here