மருத்துவம்

வரகு அரிசி காராமணி பிடி கொழுக்கட்டை செய்வது எப்படி??

Rate this post

சிறுதானியங்களை அடிக்கடி உணவில் சேர்த்து கொள்வது உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது. இன்று வரகு அரிசி, காராமணி சேர்த்து கொழுக்கட்டை செய்வது எப்படி? என்று பார்க்கலாம்.

தேவையான பொருட்கள் :
வரகு அரிசி – 1 கப்,
காராமணி – 1 கைப்பிடி,
துவரம் பருப்பு – 1 தேக்கரண்டி,
சீரகம் – 1/2 தேக்கரண்டி,
மிளகு – 1/4 தேக்கரண்டி,
துருவிய தேங்காய் – 1/2 கப்,
உப்பு – சுவைக்கேற்ப,
தண்ணீர் – 2 1/4 கப்.
தாளிக்க
எண்ணெய் – 1 1/2 மேசைக்கரண்டி,
கடுகு – 1/4 தேக்கரண்டி,
உளுத்தம்பருப்பு – 1 தேக்கரண்டி,
பெருங்காயம் – ஒரு சிட்டிகை,
பச்சை மிளகாய் – 1,
கறிவேப்பிலை – தேவையான அளவு.

செய்முறை :
பச்சை மிளகாயை பொடியாக நறுக்கி கொள்ளவும். காராமணியை 1/2 மணி நேரம் ஊறவைத்து, உப்பு சேர்த்து வேக வைத்து கொள்ளவும்.மிக்சியில் துவரம் பருப்பு, சீரகம், மிளகை போட்டு கொரகொரப்பாக பொடித்துக் கொள்ளவும்.அடுத்து அதில் வரகு அரிசியை சேர்த்து ரவையாகப் பொடிக்கவும்.கடாயில் எண்ணெய் விட்டு, தாளிக்கக் கொடுத்துள்ள பொருட்களைப் போட்டு, தாளித்த பின்னர் தண்ணீர், உப்பு சேர்த்து கொதிக்க விடவும்.நன்றாக கொதிக்க ஆரம்பித்தவுடன் உடைத்த ரவை, வேக வைத்த காராமணி, துருவிய தேங்காய் போட்டு நன்கு கட்டியில்லாமல் கிளறவும். மிதமான தீயில் கிளறி, சேர்ந்து கெட்டியாக வந்ததும் இறக்கவும்.பொறுக்கும் சூடு வந்ததும் உருண்டைகளாகப் பிடித்து, இட்லி தட்டில் வைத்து, 15 நிமிடங்கள் வரை ஆவியில் வேக வைத்து எடுத்து சட்னியுடன் சூடாகப் பரிமாறவும். சூப்பரான வரகு அரிசி காராமணி பிடி கொழுக்கட்டை தயார்.

Comment here