வலங்கைமான் அருகே உள்ள வீரமங்கலம் என்னும் கிராமத்தில் குருவைப் பயிர் மற்றும் பருத்தி வயல்களை காட்டு பன்றிகள் நாசமாக்குகின்றன

இதனால் விவசாயிகள் தங்களது வாழ்வாதாரம் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளதாக பெரும் வேதனை அடைந்துள்ளனர்.

திருவாரூர் மாவட்டம் வலங்கைமானை அடுத்த வீரமங்கலம் கிராமத்தில் குருவை மற்றும் பருத்தி சாகுபடி செய்து வருகின்றனர்.

இந்நிலையில் அங்குள்ள வயல்களில் காட்டு பன்றிகள் நெற்பயிர்களை சேதமாக்குவதாக விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.

கடந்த ஆண்டும் இதே பருவத்தின் போது காட்டு பன்றிகளைனால் சுமார் 50,000 மதிப்புள்ள நெற்பயிர்கள் நாசமாக்கப்பட்டுள்ளதாகவும், இந்த ஆண்டும் மீண்டும் காட்டு பன்றிகளின் வயலை நாசமாக்கி வருகின்றன என்று விவசாயிகள் வேதனையுடன் தெரிவிக்கின்றனர்.

நெற்பயிர்கள் வெயிலின் தாக்கத்தால் கருகிடாமல் இருக்க வைக்கோல் மூட்டத்தை களைத்து, நாற்றங்காளை நாசமாக்குகின்றன என்று விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.

அரசு அதிகாரிகளிடம் தெரிவித்தும் இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்றும் கூறப்படுகிறது.

ஆகவே தமிழக அரசு உடனடியாக இந்தப் பிரச்சனைக்கு தீர்வு காண வேண்டும் என்பதே இங்குள்ள விவசாயிகளின் கோரிக்கையாக உள்ளது.