குழந்தை நலம்

வாசல் கதவை திறப்பதற்கு

Rate this post

காலையில் கண் விழித்ததும், வாசல் கதவை திறப்பதற்கு முன்பு பெண்கள் செய்ய வேண்டிய முதல் 3 வேலை என்ன?

அதிகாலை வேளையில் கண் விழித்ததும் கட்டாயம் பெண்கள் இதைத்தான் செய்ய வேண்டும் என்று நம் முன்னோர்கள் சொல்லி வைத்துள்ளார்கள். சொல்லி வைத்துள்ளார்கள் என்று கூறுவதை விட, நம் அம்மாக்களும் பாட்டிமார்கள் இதை தான் கடைப்பிடித்து வந்தார்கள் என்றே சொல்லலாம். நவ நாகரீகம் வளர்ந்து கொண்டே வரும் இந்த காலகட்டத்தில், எல்லா பழக்கமும் மாறிவிட்டது. பெண்கள் காலையில் எழுந்து செய்யும் பழக்கவழக்கமும் அதற்கு ஏற்றார் போல் மாறிவிட்டது. எதையும் குறை கூறுவதற்கு சொல்லுவது இல்லை. இது தான் நல்லது என்று தெரிந்தால் அதை திருத்திக் கொள்வதில் தவறும் இல்லை. காலை எழுந்ததும் செய்யவேண்டிய முதல் மூன்று முக்கியமான விஷயம் என்ன என்பதை பற்றி, இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளலாம். இது எல்லா பெண்களுக்கும் தெரிந்திருந்தாலும் கடைபிடிப்பவர் எத்தனை பேர் என்பதையும் தெரிந்து கொள்ளலாம்.

படுக்கையை விட்டு எந்திரித்த உடன், ஒரு பெண்ணாகபட்டவள் முதலில் குளியலறைக்கு சென்று, காலைக்கடன்களை முடித்துவிட்டு, குளிப்பதுதான் வழக்கமாக இருந்து வந்தது. ஆனால் அது நேரமின்மை காரணமாக, சூழ்நிலை காரணமாக இன்று மாறிவிட்டது. காலை எழுந்ததும் குளிப்பதை பெண்கள் மட்டுமல்ல, எல்லோருமே மறந்துவிட்டோம். முதலில் காலை எழுந்தவுடன் குளிக்க வேண்டியது பெண்களுடைய கடமை. முடியாதவர்கள் முதலில் பல்லை தேய்த்து விட்டு, முகத்தை அலம்பி விட்டு, சிறிது தண்ணீரை எடுத்து உங்கள் தலையில் தெளித்து கொள்ளுங்கள்.

அதன் பின்பு நேராக சென்று முகத்தை துடைத்து விட்டு, உங்கள் முகத்தை கண்ணாடியில் நோக்க வேண்டும். தலைவிரி கோலமாக இருக்கும் முடியை முதலில் திருத்தவேண்டும். முதல் நாள் இரவு தலையில் வைத்திருந்த வாடிய பூக்களை நீக்கிவிட வேண்டும். நெற்றியில் பொட்டு இட்டுக் கொள்ள வேண்டும். இதற்குப் பின்புதான் உங்கள் வீட்டு வாசல் கதவை திறக்க வேண்டும். அதுவும் உங்களது வலது கையால் வாசல் கதவை திறக்க வேண்டும். உங்கள் வீட்டு வாசல் கதவு இரட்டை கனவாக இருந்தால் இரண்டு கதவையும் ஒன்றாக திறக்க வேண்டும். ஏனென்றால், உங்கள் வீட்டிற்கு உள்ளே நுழைய மகாலட்சுமி காத்திருப்பாள். அந்த சமயம் நீங்கள் பார்ப்பதற்கே பயப்படும் அளவிற்கு, வாசல் கதவைத் திறந்தால், உள்ளே வரக் கூடிய மகாலட்சுமி கூட, அப்படியே திரும்பி ஓடி விடுவாள் என்றுதான் சொல்ல வேண்டும்.

அதன் பின்பு வாசல் தெளித்து கோலம் போடுவது தான் நல்ல பழக்கம். இதன் மூலம் நம் வீட்டிற்கு உள்ளே வரும் மகாலட்சுமி எந்தவித சஞ்சலமும் இல்லாமல் வருவாள் என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் இன்றைய காலகட்டத்தில் சில பெண்கள் இதையெல்லாம் கடைபிடிப்பதில்லை.

எத்தனையோ பெண்கள் தன் கணவன் பணிக்குச் சென்ற பின்பு, தன் குழந்தை பள்ளிக்கூடம் சென்ற பின்பு வெளியே வந்து பல் தேய்க்கும் பழக்கத்தை நாம் பார்த்திருக்கின்றோம். இது மிக மிக தவறான ஒன்று. காலை எழுந்தவுடன் பல் தேய்த்து முகத்தைக் கழுவிக் கொள்ளுங்கள். எந்த நேரத்தில் பல் துலக்கினாலும் வீட்டு வாசலுக்கு வந்து, எல்லோரும் பார்க்கும்படி பல் தேய்க்கும் பழக்கம் அநாகரீகமானது என்பதையும் மனதில் வைத்துக் கொள்ளுங்கள்.

*ஆக மேற்குறிப்பிட்டுள்ள தவறுகளை மனதில் வைத்துக்கொள்ளுங்கள். மூதேவி என்று சொல்லப்படும் தரித்திரத்தை உங்கள் வீட்டிற்குள் நீங்களே அழைத்து வருவதற்கு இதுவும் ஒரு காரணமாக சாஸ்திரத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. எழுந்தவுடன் உங்களுடைய முக்கியமான இந்த மூன்று கடமைகளை எல்லாம் முடித்துவிட்டு, அதன்பின்பு சமையலறைக்கு சென்று அடுப்பைப் பற்ற வையுங்கள். அந்த நாள் முழுவதும் இனிமையான நாளாக அமையும் என்பதில் எந்த ஒரு சந்தேகமும் இல்லை…

Comment here