India

வாயில் இரும்பு கம்பியால் குத்தி இளைஞர் கொலை – அதிர்ச்சி சம்பவம்

Rate this post

கேரள மாநிலம் இடுக்கி மாவட்டம் மறையூரில் பழங்குடியின இளைஞர் ஒருவர் வாயில் கம்பி செருகப்பட்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கேரள மாநிலம் இடுக்கி மாவட்டம் மறையூரில் பழங்குடியின இளைஞர் ரமேஷ் (25), ரமேஷின் உறவினர் சுரேஷ் உடன் ஏற்பட்ட சொத்து தகராறே கொலைக்குக் காரணம் என்று போலீசார் விசாரணையில் தெரியவந்துள்ளது.

வெள்ளிக்கிழமை நள்ளிரவு நடந்த தகராறின்போது, குடிபோதையில் இருந்த சுரேஷ், ரமேஷை கம்பியால் தலையில் தாக்கி வாயில் கம்பியைவைத்து கொலை செய்துள்ளதாக தெரியவந்தது.

அதன்பின் சுரேஷ் தலைமறைவானார். தலைமறைவாக இருந்த அவர், அருகில் உள்ள காட்டுப் பகுதியில் இருந்து பிடிபட்டதாக போலீசார் தெரிவித்தார்கள்.

Comment here