பொது

வாழ்க்கையில் சாதிப்பதற்கு வயது முட்டுக்கட்டையா

Rate this post

பொதுவாகவே நம் நாட்டில் திருமணமாகிவிட்டது, என்றால் ஆண்களாக இருந்தாலும் சரி, பெண்களாக இருந்தாலும் சரி ‘நமக்கு வயதாகி விட்டது’ என்ற ஒரு எண்ணம் வந்துவிடும். குறிப்பாக பெண்களுக்கு ஒரு குழந்தை பிறந்து விட்டால்! சொல்லவே வேண்டாம். அவர்கள் தங்களுடைய வாழ்க்கையை இழந்தது போல ஒரு மன நிலைக்குச் சென்றுவிடுவார்கள். தவறாக புரிந்து கொள்ள வேண்டாம். அவர்களால் எதையும் சாதிக்க முடியாது. குழந்தையை பார்த்துக்கொள்ள வேண்டும் என்ற அவர்களுக்கு வந்து விடும். அதுமட்டுமல்லாமல் உடல் சோர்வு ஏற்பட்டு விட்டது. வயதாகிவிட்டது. இனி என்னால் எதையுமே செய்ய முடியாது என்று நினைத்து, ‘இனி எதை சாதிக்கப் போகிறோம்’ என்று எல்லாவற்றையும் விட்டு விடுவார்கள். இந்தப் பட்டியலில் கண்டிப்பாக சில ஆண்களும் இருப்பார்கள். வேலைக்கு செல்வார்கள். சம்பாதிப்பார்கள். அதைத் தாண்டி வேறு எந்த முயற்சியிலும் ஈடுபட மாட்டார்கள். 30 வயதைத் தாண்டி விட்டாலே, வயதாகிவிட்டது என்ற எண்ணம் கூடுமானவரை பலபேருக்கு வந்துவிடும். ஆனால் இவர்களைப் பாருங்கள். இவர்கள் கதையை கேட்ட பின்பு நமக்கே பத்து வயது குறைந்தது போல ஒரு எண்ணம் வந்து விடும். கலிபோர்னியாவில் வசிக்கும் க்ளென் (Glen) என்பவருக்கு வயது 100. இவரது நூறாவது வயதை கடந்த பின்பு வானத்தில் பறக்க வேண்டும் என்ற ஆசை இவருக்கு வந்துள்ளது. (Sky diving) இந்த ஆசையை ரகசியமாக அவரது பேரனிடம் கூறி, வீட்டில் உள்ளவர்கள் யாருக்கும் தெரியாமல் வானில் பறந்து தன் ஆசையை நிறைவேற்றிக் கொண்டார் க்ளென். 13,000 அடி உயரத்தில் இருந்து, வானில் பறந்து கீழே இறங்கிய அவருக்கு, பயத்தினால் ஏதாவது பாதிப்பு உள்ளதா என்று சோதித்து பார்த்தவர்களிடம், இவர் ‘இன்னொரு முறை வானில் பறப்பதற்கு வாய்ப்பு கேட்டு இருக்கின்றார்’ என்பது குறிப்பிடத்தக்கது.

 

யாஸ்மின் ரோஸி (Yasmina Rossi) இவர்களைப் பார்த்தால் 60 வயதானவர் என்று யாராலும் சொல்ல முடியாது. மாடலிங் செய்ய வேண்டும் என்ற தனது குறிக்கோளை 20 வயதில் தொடங்கிய இவர், தனது 60 வயது வரை முயற்சி செய்துதான் சாதித்துள்ளார். இவர் தனது ஆசையை நிறைவேற்றுவதற்காக முயற்சி செய்வதில் ஒருபோதும் பின் அடைந்ததில்லை. ‘தனக்கு வயதாகி விட்டது. இனி மாடலிங் துறையில் என்னால் முன்னேற முடியாது’ என்று ஒருபோதும் இவர் நினைத்ததே இல்லை என்று கூறியுள்ளார். இன்று இவரை பார்க்கும் ஒவ்வொருவருக்கும் 60வது வயதில் இவ்வளவு இளமையா? என்ற ஆச்சரியம் தான் இருக்கிறது.

 

Comment here