Tamilnadu

விஜயதசமி விழா – கூத்தனூர் கோவிலில் அலைமோதும் மக்கள் கூட்டம்

3.4/5 - (5 votes)

தமிழகத்தில் சரஸ்வதி அம்மனுக்காக அமையப்பெற்ற ஒரு திருக்கோவிலாக திருவாரூர் கூத்தனூரில் அமைந்துள்ள சரஸ்வதி கோயிலில் 2வது நாளாக விஜயதசமியானா இன்று திரளாக பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை அழைத்து வந்து சரஸ்வதி வழிபாடு செய்தார்கள்.

தமிழகத்தில் சரஸ்வதி அம்மனுக்காக தனியாக ஆலயம் அமைந்துள்ள ஒரே இடம் திருவாரூர் மாவட்டம் பூந்தோட்டம் அருகே உள்ள கூத்தனூர் என்ற கோவில்.

இந்த கோவிலில் ஆண்டு தோறும் சரஸ்வதி பூஜை விஜயதசமி வெகு விமர்சையாக கொண்டாடப்படும்.

இந்நிலையில் இன்று விஜயதசமி விழா உலகம் முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது.

இதனையடுத்து கூத்தனூர் கோவிலில் மக்கள் கூட்டம் அலைமோதுகிறது.

பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளோடு நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்து அதன் பிறகு நெல் கொட்டிய தாம்பூலத்தில் அன்னா ஆவன்னா என தங்கள் தாய் மொழியை எழுதி சரஸ்வதி அம்மனை வழிபட்டு செல்கிறார்கள்.

Comment here