Cinema

விஜய் சேதுபதி கொடுத்த 1 லட்சம் பணம் எனக்கு 1 கோடிக்கு சமம் – போண்டாமணி

Rate this post

தமிழ் சினிமாவில் நகைச்சுவை நடிகராக வலம் வந்தவர் போண்டா மணி.

இவர் ரன், சுந்தரா டிராவல்ஸ், வின்னர், திருமலை உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார்.

இந்நிலையில், நடிகர் போண்டா மணிக்கு 2 சிறுநீரகங்களும் செயலிழந்து சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

அவருக்கு சிறுநீரக பிரிவில் டயாலிசிஸ் செய்யப்பட்டு வருகிறது. மாற்று சிறுநீரகம் பொருத்தும் வரையில் அவருக்கு சிகிச்சை அளிக்க மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் மா.சுப்ரமணியன் ஏற்பாடு செய்துள்ளார்.

இந்நிலையில், நடிகர் விஜய் சேதுபதி, போண்டாமணியின் மருத்துவ உதவிக்கு ரூ. 1 லட்சம் கொடுத்து உதவி செய்துள்ளார்.

இது குறித்து போண்டாமணி கூறுகையில், நான் கேட்டவுடனே நடிகர் விஜய் சேதுபதி ரூ.1 லட்சம் பணத்தை வங்கி எண்ணிற்கு போட்டுவிட்டார். அவர் கொடுத்த 1 லட்சம் ஒரு கோடிக்கு சமம்” என்று நெகிழ்ச்சியோடு தெரிவித்துள்ளார்.

Comment here