Tamilnadu

விருத்தாசலம் அருகே ஆற்றங்கரை ஓரம் கிடந்த மூதாட்டி சடலம்..!

Rate this post

கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அடுத்த நல்லூர் வில்வவனேசுவரர் கோயில் அருகில் மணிமுத்தாறு ஆற்றங்கரை ஓரம் சுமார் 65 வயது மதிக்கத்தக்க மூதாட்டி சடலமாக கிடந்துள்ளார்.

இதனை அப்பகுதியில் குப்பை கொட்ட சென்ற பொதுமக்கள் பார்த்து ஊராட்சி மன்ற தலைவருக்கு தகவல் கொடுத்துள்ளனர்.

தகவலின் அடிப்படையில் ஊராட்சி மன்ற தலைவர் வேப்பூர் காவல் நிலையத்தில் அடையாளம் தெரியாத 65 வயது மதிக்கத்தக்க மூதாட்டி சடலம் நல்லூர் வில்வவனேசுவரர் கோயில் அருகில் மணிமுத்தாறு ஆற்றங்கரையின் ஓரமாக கிடப்பதாக வேப்பூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

புகாரின் அடிப்படையில் வேப்பூர் போலீசார் (மற்றும் ) திட்டக்குடி காவல் துணை கண்காணிப்பாளர்
விரைந்து வந்து சடலத்தை கைப்பற்றி உடல் கூறும் ஆய்விற்கு விருத்தாசலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

பின்பு போலீசார் வழக்கு பதிவு செய்து கொலையா? தற்கொலையா? என விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதனால் இப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Comment here