தொழில்

விருத்தாசலம் அருகே சாலை விபத்தில் மாணவர் உயிரிழப்பு…!

Rate this post

கடலூர் மாவட்டம், விருத்தாசலம் அடுத்த கோ.பொன்னேரி கிராமத்தைச் சேர்ந்த செந்தில்குமார், மீரா இவர்களின் மகன் பிரேம்குமார் (13) என்பவர் நேற்று மாலை வீட்டின் முன்பு சாலை ஓரமாக நின்று கொண்டிருக்கும்போது எதிரே வந்த இருசக்கர வாகனம் மோதி விபத்துக்குள்ளானதில் பிரேம்குமார் சம்பவ இடத்திலேயே உயிர் இழந்தார்

இது பற்றிய தகவல் அறிந்து வந்த விருத்தாசலம் போலீசார் பிரேம்குமார் உடலை கைப்பற்றி உடல் கூறு ஆய்வுக்கு விருத்தாசலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

பின்பு இன்று பிரேம்குமாரின் உடல் உடல் கூறு ஆய்வு செய்யப்பட்டு சொந்த ஊரான கோ.பொன்னேரி கிராமத்திற்கு கொண்டு வந்தனர்

அப்போது அங்கு இருந்த உறவினர்கள் பிரேம்குமாரை விபத்து ஏற்படுத்திய நபரை கைது செய்ய வேண்டும் என சாலை மறியலில் ஈடுபட்டனர்.

இது குறித்து தகவல் அறிந்து வந்த விருத்தாசலம் காவல் ஆய்வாளர் முருகேசன் தலைமையிலான போலீசார் சாலை மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி சமாதானம் செய்தனர்.

இதனால் அரை மணி நேரத்திற்கு மேல் போக்குவரத்து பாதிக்கப்பட்டது பரபரப்பாக காணப்பட்டது

Comment here