Tamilnadu

விருத்தாசலம் அருகே பயங்கர தீ விபத்து – 4 வீடுகள் எரிந்து நாசம்

Rate this post

விருத்தாசலம் அருகே பயங்கர தீ விபத்து ஏற்பட்டதில் 4 வீடுகள் எரிந்து நாசமாயின.

தீ விபத்து – 4 வீடுகள் எரிந்து நாசம்

கடலூர் மாவட்டம், திட்டக்குடி அடுத்த பெருமுளை கிராமத்தைச் சேர்ந்தவர் கட்டிமுத்து இவரது குடிசை வீட்டில் இன்று காலை மின்கசிவு ஏற்பட்டு தீ பிடித்தது.

அப்போது காற்று பலமாக வீசியதால் அருகிலிருந்த ராஜவேல் ராயர் அஞ்சலை ஆகியோரது வீடுகளுக்கும் தீ மளமளவென பரவியது.

இது குறித்து போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசாரும், தீயணைப்புத்துறையினரும் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர்.

இதனையடுத்து, தீயணைப்பு துறையினர் நீண்ட நேரப் போராட்டத்திற்குப் பின் பொதுமக்களின் உதவியுடன் அருகில் உள்ள வீடுகளுக்கு பரவாமல் கட்டுப்படுத்தினர்.

இதில் 4 வீடுகளிலிருந்த சுமார் 2 லட்ச ரூபாய் மதிப்புடைய வீட்டு உபயோக பொருட்கள் முற்றிலும் எரிந்து சாம்பலானது.

 

Comment here