Tamilnadu

விருத்தாசலம் அருகே மின்சாரம் தாக்கி 3 பேர் பலி..!

Rate this post

கடலூர் மாவட்டம், வேப்பூர் அடுத்த சிறுப்பாக்கம் கிராமத்தில் நேற்று மாலை ராமன் மற்றும் அவரது மகன் மணிகண்டன் ஆகிய இருவரும் தங்களது வீட்டின் மேல் பகுதியில் காய வைத்திருந்த துணியை எடுக்கும் பொழுது மின் கம்பத்தில் இருந்து வரும் ஸ்டே கம்பியில் மின்சாரம் இருப்பது தெரியாமல் தொட்ட தந்தை மீது மின்சாரம் பாய்ந்து உள்ளது.

அவரின் அலறல் சத்தம் கேட்ட மகன் ஓடி போய் காப்பாற்ற முயற்சிக்கும் போது மகன் மீது மின்சாரம் பாய்ந்து பரிதாபமாக இரண்டு பேரும் உயிரிழந்தனர்.

இதேபோல், சிறுபாகம் அடுத்த சித்தேரி கிராமத்தில் ஐம்பது வயது மதிக்கத்தக்க பெரியசாமி என்பவர் வீட்டின் முன்பு சென்ற மின் கம்பிகள் அறுந்து விழுந்ததில் சம்பவ இடத்திலேயே அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

இதுபோன்ற விபத்துக்களை வரும் காலங்களில் தவிர்த்திட வேண்டும் என சுற்றுவட்டார கிராம மக்கள் மின்வாரியத்திற்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

Comment here