Cinema

வில்லனாக நடிக்க சம்மதம்? ரசிகர்களுக்கு நடிகர் விஜய் சர்ப்ரைஸ்…!

Rate this post

விஜய் – ஏ.ஆர்.முருகதாஸ் கூட்டணியில் வெளியான துப்பாக்கி, கத்தி, சர்க்கார், ஆகிய 3 திரைப்படங்களும் ரசிகர்களுக்கு மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.

இயக்குநர் முருகதாஸ் மீண்டும் விஜய்யை வைத்து ஒரு படம் இயக்க மாட்டாரா என பலர் ரசிகர்கள் ஆவலுடன் காத்திருப்பது உண்டு.

இந்நிலையில், இயக்குனர் முருகதாஸ் இன்று 48-வது பிறந்தநாளை கொண்டாடினார். அவருக்கு ரசிகர்கள் மற்றும் சினிமா பிரபலங்கள் பலரும் வாழ்த்துக்களை தெரிவித்தனர்.

சமீபத்தில் ஒரு சேனலுக்கு இயக்குனர் முருகதாஸ் பேட்டி கொடுத்தார்.

அப்பேட்டியில் அவர் பேசுகையில், நடிகர் விஜய்க்கு மகேஷ்பாபுவை வில்லனாக்கும் புதிய கான்செப்டுடன் தான் விஜய்யை அணுகினேன். உடனடியாக அவர் ஓகே சொல்லிவிட்டார். மகேஷ்பாபு நடித்தால் தான் அந்த படத்தில் நடிப்பேன் என்று விஜய் கூறினார்.

இதில் உள்ள சுவாரஸ்யம் என்னவென்றால், தமிழில் விஜய் ஹீரோ, மகேஷ்பாபு வில்லன். அதேபோல, தெலுங்கில் மகேஷ் பாபு ஹீரோ, விஜய் வில்லன். இதற்கு விஜய் ஓகே சொல்லிவிட்டார் என்றார்.

Comment here