Tamilnadu

வெளிநாட்டினர் வருகை: தாஜ்மகாலை பின்னுக்குத்தள்ளிய மாமல்லபுரம்

4.3/5 - (3 votes)

தாஜ்மகால் என்ற உலக அதிசயத்துடன் ஒப்பிடுகையில் நம்ம ஊரு மாமல்லபுரம் அதிக பார்வையாளர்களை கவர்ந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

இந்திய சுற்றுலா தலங்களைப் பார்க்க உலகமெங்கும் இருந்து மக்கள் கூட்டம், கூட்டமாக வருகிறார்கள்.

அதுவும் கட்டணம் செலுத்தி டிக்கெட் வாங்கி பார்க்கிற நினைவுச்சின்னங்களில் தாஜ்மகாலை நமது மாமல்லபுரம் பின்னுக்குத் தள்ளி இருப்பதாக மத்திய சுற்றுலாத்துறை அமைச்சகம் தகவல் தெரிவித்துள்ளது.

மாமல்லபுரம் வந்து அங்குள்ள குடைவரைக்கோவில்கள், ரதங்கள், சிற்பங்கள் என பார்த்து ரசித்துச் சென்றுள்ள வெளிநாட்டினர் எண்ணிக்கை 1 லட்சத்து 44 ஆயிரத்து 984 ஆக பதிவாகி உள்ளது.

தாஜ்மகாலை கண்டு களித்துச் சென்ற வெளிநாட்டவரின் எண்ணிக்கை 38 ஆயிரத்து 922 ஆக பதிவாகி உள்ளது.

Comment here